Thursday, September 15, 2011

ஆப்டிகல் (CD/DVD/BLUERAY) வின் செயல்பாடுகளைப்பற்றி நீங்களும் தெறிந்துக்கொள்ளலாமே !.

கீழ் வன்பொருள் செயல்முறை(hardware), 


இந்த ஒளிவ இயக்ககம் எனப்படும் ஆப்டிகல்ட்ரைவில் சிடி டிவிடி ஆகிய இரண்டுவகை வட்டுகளில் தரவுகளை எழுதுவதற்கும் படிப்பதற்கும் சேமிப்பதற்கும்  பயன்படுத்திட படுகின்றது.
பொதுவாக இந்தவட்டுகளில் தரவுகள் 0 ,1 ஆகிய இரண்டு எண்களின் அடிப்படையிலேயே  தேக்கிவைக்கப்படுகின்றது. வழக்கமாக இந்த 0 ,1 ஆகிய இரண்டு எண்களும் ஒரு சிடியில் 0= பள்ளம் , 1= சமதளம் என்றவாறு  இதனுடைய புறப்பரப்பு அமைந்திருக்கும்.

இந்த சிடியை ஒரு சிடிப்ளேயர் மூலம் இயக்கிடும்போது லேசர் ஒளிக்கற்றை இதனுடைய தடம்வழியாக பாய்ந்தோடும் அப்போது சமதளமானது லேசர் ஒளிக்கற்றையை ஒளிவ உணர்விக்கு பிரிதிபலித்துவிடும்.உடன்    சிடிப்ளேயர் ஆனது இந்தபகுதி 1 என அறிந்து கொள்ளும். அதேநேரத்தில் பள்ளமானது லேசர் ஒளிக்கற்றையை ஒளிவ உணர்விக்கு  பதிலாக வேறு பகுதிக்கு பிரிதிபலித்துவிடும்.லேசர் ஒளிக்கற்றை பெறப்படாததால்    சிடிப்ளேயர் ஆனது இந்தபகுதி 0 என அறிந்துகொள்ளும்.


இந்த சிடியின் மையப்பகுதியிலிருந்து வெளிப்பகுதிவரை ஒரு  திருகாணியில் அமைந்துள்ள தொடர்ச்சியான வளைந்த மறைபோன்று இதனுடைய பள்ளம் அமைந்தி ருக்கும்.லேசர் ஒளிக்கற்றைஇதனுடைய தடம்வழியாக பாய்ந்தோடும்போது.சிடியின் மையப் பகுதியில் உள்ள பள்ளங்களில் மெதுவாக நகருமாறும்  சிடியின் வெளிப்பகுதியில் உள்ள பள்ளங்களில் வேகமாக நகருமாறும்  சிடிப்ளேயர்  இயங்கிடும் வேகம் அமைந்திருக்கும்.
ஒரு டிவிடியில் சிடிபோன்று பள்ளம் சமதளம் என்றவாறு  இதனுடைய புறப்பரப்பு அமைந்திருக்காது. .

அதற்குபதிலாக ஒரு பிரிதிபலிக்கின்ற உலோக உறையால் இதனுடைய புறபரப்பு மூடப்பட்டுள்ளது. இது ஒளிஉணர்வு அச்சின் மேலுறையாக அமைந்துள்ளது. இந்த டிவிடி வட்டில் தரவு எதுவுமில்லாதபோது இந்த ஒளிஉணர்வு அச்சானதுலேசர் ஒளிக்கற்றையை தாராளமாக ஊடுருவிசெல்ல அனுமதிக்கின்றது. தரவுகளை எழுதிடும்போது இந்த ஒளி உணர்வு அச்சு வெப்பப்படுத்தப்பட்டு  ஒளி ஊடுருவிசெல்லமுடியாத கரும்புள்ளி யாகிவிடுகின்றது.

இந்த டிவிடியை ஒரு டிவிடி ப்ளேயர் மூலம் இயக்கிடும்போது லேசர் ஒளிக்கற்றை இதனுடைய தடம்வழியாக பாய்ந்தோடும் அப்போது கரும்புள்ளியானது லேசர் ஒளிக்கற்றையை ஒளிவ உணர்விக்கு பிரிதிபலித்துவிடும்.உடன்   டிவிடிப்ளேயர் ஆனது இந்தபகுதி 0 என அறிந்துகொள்ளும். அதேநேரத்தில் மற்றபகுதியில் லேசர் ஒளிக்கற்றை ஊடுருவிசெல்ல அனுமதிக்கப்படுவதால் ஒளிவ உணர்விக்கு  பதிலாக வேறு பகுதிக்கு சென்றுவிடுகின்றது..லேசர் ஒளிக்கற்றை பிரிதிபலித்து பெறப்படாததால்   டிவிடிப்ளேயர் ஆனது இந்தபகுதி 1 என அறிந்துகொள்ளும்.

இதன் மையப்பகுதியிலிருந்து வெளிப்பகுதிவரை ஒரு         திருகாணியில் அமைந்துள்ள தொடர்ச்சியான வளைந்த மறைபோன்று  பள்ளம் ப்ளாஷ்டிக்கால் இந்த டிவிடி அமைந்திருக்கும்.
இது லேசர் ஒளிக்கற்றைஇதனுடைய தடம்வழியாக  மிகசரியாக பாய்ந்தோடும் படி அமைக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP