தொலைக்காட்சியால் நம் வீட்டிலும் பிரட்சனை
அவ்வப்போதைய நிகழ்வுகளை வீட்டுக்குள் கொண்டு வரும் ஊடகமாக இது இருப்பினும், நடுத்தர மற்றும் ஏழைக் குடும்பங்களில் பொதுத் தேர்வுக்காகப் படித்துவரும் மாணவ, மாணவியருக்கு இப்போது வில்லனாக மாறியுள்ளது.
தொலைக்காட்சி அதிக ஆக்கிரமிப்பு இல்லாத காலங்களில், ஆசிரியர் தரும் வீட்டுப் பாடங்களை, மாணவர்கள் கவனச்சிதறல் இன்றி எழுதிச் சென்ற நிலை இப்போது இல்லை.
தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்து, பாடல்களிலும், சினிமா உள்ளிட்ட கேளிக்கை விஷயங்களிலும் கவனம் செலுத்திக்கொண்டே, வீட்டுப் பாடங்களை எழுதும் மாணவர்களின் எண்ணிக்கைதான் இன்றைக்கு அதிகம். இதை விரும்பாத பெற்றோர், கண்டிக்க முற்பட்டாலோ, வீடு போர்க்களமாக மாறிவிடுவதும் உண்டு.
தொலைக்காட்சி பார்ப்பதில் மனமும், பார்வையும் ஈடுபட, உடலும், செயலும் மட்டுமே படிப்புக்காகச் செலவிடும் நிலை இன்றைய மாணவர்களின் படிப்புத் திறனையும், நினைவுத் திறனையும் மங்கச்செய்து வருவது நடுத்தரக் குடும்பங்களில் காணப்படுகிறது.

வீட்டுப் பணிகளுக்கிடையே பெரும்பாலான பெண்களுக்குப் பொழுதுபோக்கு அம்சமாகவும், உற்ற தோழமையாகவும் தொலைக்காட்சிப் பெட்டிகள் விளங்குவதால், குடும்பத்தில் ஒருவர் விழித்திருக்கும்வரை இயங்கிக்கொண்டே இருப்பதுதான் இன்றைய தொலைக்காட்சிப் பெட்டிகளின் நிலை. தேர்தல்கள் வரும்போது அரசியல் ஆர்வலர்களின் ஆர்வத்துக்கு அவ்வப்போது தீனி போடுவது இன்றைய தொலைக்காட்சிகள்தான்.
போதாக்குறைக்கு IPL கிரிக்கெட் போட்டியும் சேர்ந்துகொண்டதால் இன்றைக்குத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டிலும் நள்ளிரவுவரை இயங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
போதாக்குறைக்கு IPL கிரிக்கெட் போட்டியும் சேர்ந்துகொண்டதால் இன்றைக்குத் தொலைக்காட்சிப் பெட்டிகள் ஒவ்வொரு வீட்டிலும் நள்ளிரவுவரை இயங்குவது தவிர்க்க முடியாததாகிவிட்டது.
இந்நிலையில் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது.
இத்தகைய நேரத்தில், பெற்றோரும், அண்டை வீட்டாரும் பொறுப்புடன் நடந்துகொள்வது சமுதாயக் கடமை என்பதை உணர வேண்டும்.
இன்றைய மாணவர்களுக்கு அறிவும், திறனும் இருந்தாலும், பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் அவர்களுக்கு மிகப்பெரிய பக்க பலமாக அமையும் என்பதையும் மறக்கக் கூடாது.
அரசியல் ஆர்வலர்களாகவும், கிரிக்கெட் ரசிகர்களாகவும் உள்ள குடும்பத்தினர், முடிந்தவரை தங்கள் குழந்தைகளின் தேர்வு முடியும்வரை தொலைக்காட்சி பார்ப்பதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். முடிந்தால் கேபிள் இணைப்பைத் தாற்காலிகமாகத் துண்டிப்பதும் நல்லது.
அண்டை வீட்டாரும், தொலைக்காட்சிப் பெட்டிகளின் ஒலி அளவைக் குறைத்துக் கொள்வதுகூட நல்லது.
தேர்வைச் சந்திக்கும் மாணவர் ஒருவர் வீட்டில் காலை நேரத்தில் படித்துக் கொண்டிருந்தார்.
பிரச்னை காவல் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒலிபெருக்கி துண்டிக்கப்பட்டது. இத்தகைய சூழலைக்கூட, பெற்றோர் தயங்காது சந்திக்க வேண்டும்.
இன்றைக்கு அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர்களிடம் கேட்டால், ""நான் இரவு வெகுநேரம் கண்விழித்துப் படிப்பேன். அப்பாவோ, அம்மாவோ எனது சந்தேகங்களுக்கு விடையளிப்பர். அப்படி இல்லாவிட்டாலும், அவர்கள் நான் படுக்கைக்குச் செல்லும்வரை விழித்திருப்பர்'' என்று கூறுவதுண்டு. படித்த தலைமுறையினரிடையே காணப்படும் இத்தகைய ஆரோக்கியமான நடவடிக்கைகளை மற்றவர்களும் பின்பற்றுவதில் தவறில்லை.
தேர்வுக்குச் செல்வதற்கு முன் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தோர் இறைவழிபாடு செய்து, அனுப்புவதும், அவசரமாகத் தேர்வுக் கூடத்துக்குப் புறப்படும் தங்கள் குழந்தைகள், தேர்வுக்கான அனுமதிச் சீட்டு, எழுதுபொருள்களை விட்டுச் சென்றுவிடாமல் இருக்கத் துணைபுரிவதும்கூட, அச்சத்துடன் தேர்வைச் சந்திக்கவிருக்கும் மாணவருக்கு நம்பிக்கை ஊட்டும் செயலாக அமையும்.

டிவி'யில் வன்முறை நிகழ்ச்சிகள்: குழந்தைகளுக்கு தூக்கம் போச்சு!
"டிவி'யில் வரும் வன்முறை நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால், அவர்களின் தூக்கம் கெடுகிறது. அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமை போன்ற மோசமான விளைவுகளை இது ஏற்படுத்தும். எனவே, வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்க்காமல் இருப்பதில் அவர்களின் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்' என்று புதிய ஆய்வு எச்சரிக்கிறது.
பல "டிவி' நிறுவனங்கள், குழந்தைகளுக்கு என தனி சேனலை
கொண்டுள்ளன. இதில், குழந்தைகளை கவர்வதற்காக நாடகங்கள், திரைப்படங்கள், கார்ட்டூன்கள், பொழுதுபோக்கு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. குழந்தைகளிடம் கவனம் எடுத்துக் கொள்வதில் பெற்றோர் சலிப்படைகின்றனர். எனவே, "டிவி' பார்க்கும் பழக்கத்தை குழந்தைகளுக்கு பெற்றோர் பழக்கி விடுகின்றனர்.

"டிவி' பார்க்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து பெற்றோருக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள சியாட்டில் குழந்தைகள் ஆய்வு நிறுவனம், மூன்று முதல் ஐந்து வயதுள்ள 600 குழந்தைகளையும், அவர்களது பெற்றோரையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
குழந்தைகள் தூங்கும் போது ஏற்படும் தீய கனவுகள், தூக்கத்தில் அலறுவது, இருட்டை கண்டு பயப்படுவது, சரியாக தூங்காததால் பகலில் நடப்பதில் சிரமம், சோர்வாக இருப்பது உள்ளிட்ட பிரச்னைகளை குறித்து வைக்கும்படி பெற்றொருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதன் மூலம், மூன்று வயது முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள், பகலில் "டிவி' நிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். வன்முறையை தூண்டும் வகையிலான நிகழ்ச்சிகளை குழந்தைகள் பார்ப்பதால், இரவில் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, குழந்தைகள், இரவு 7 மணிக்கு மேல் "டிவி'யில் எந்த நிகழ்ச்சியையும் பார்க்காமல் இருப்பது அவர்களது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவும்.
சிறு வயதில் தூக்கத்தை பாதிக்கும் "டிவி' நிகழ்ச்சிகளை தொடந்து பார்ப்பது, அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் உடல் பருமன், பள்ளிக்கு செல்லாமல் இருப்பது போன்ற மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்பது, தெரிய வந்துள்ளது. "வளரும் குழந்தைகளின் தூக்கத்தை பாதிப்பதில் "டிவி' நிகழ்ச்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கார்ட்டூன்கள், நேரடி ஒளிபரப்புகள், குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளிலேயே பெரும்பாலும், வன்முறையை தூண்டும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
ஏழு முதல் 12 வயதுள்ள குழந்தைகளுக்கு என காட்டப்படும் நிகழ்ச்சிகளை, மூன்று முதல் ஐந்து வயதுள்ள குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் பார்க்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளில் காட்டப்படும் வன்முறை சம்பவங்கள் குழந்தைகளை வெகுவாக பாதிக்கின்றன. ஆனால், எவ்வளவு நேரம் குழந்தைகள் "டிவி' பார்க்கின்றனர்; அதில், எவ்வளவு நேரம் வன்முறை நிகழ்ச்சிகள் காட்டப்படுகின்றன என்பது குறித்து பெற்றோர் குறைவான மதிப்பீடு செய்கின்றனர்' என்கிறார் ஆய்வாளர் மைக்கெல் காரிசன்.
மியாமி மருத்துவ பல்கலைக்கழகத்தை சேர்ந்த குழந்தைகள் நல டாக்டர் நீனா மாலிக் கூறுகையில், "பொதுவாக, காட்டப்படும் நிகழ்ச்சிகளில் எது உண்மையானது; எது உண்மை இல்லாதது என்பது குறித்து குழந்தைகளால் புரிந்துகொள்ள முடியாது. எனவே, இரவு நேரங்களில் வன்முறையை தூண்டும் "டிவி' நிகழ்ச்சிகளை குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோர் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது' என்று எச்சரிக்கிறார்
0 கருத்துரை:
Post a Comment