கணினியை இரட்டைஇயக்கமுறைமையில் செயல்படச்செய்வதுDual Booting
அனைத்து கணினிலும் உள்ள லினக்ஸ் இயக்கத்துடன் விண்டோவும் கலந்துவிட்டதே என லினக்ஸ் தனித்தன்மை விரும்பிகள் கத்துவார்கள். ஆனாலும் பெரும்பாலானவர்கள் இரண்டு இயக்க அமைப்பையும் தேவையென்றே விரும்புகிறார்கள்.
சமீபத்தில் வெளியிடப்படுகின்ற லினக்ஸ் இயக்க அமைப்புகள் அனைத்தும் விண்டோஸ் இயக்க அமைப்பையும் கையாளுகின்ற திறனுடனே இருக்கின்றன. இதன் விளைவாக இரண்டு இயக்கமுறைமை அமைப்புகளுக்கிடையே கோப்புகளை பகிர்ந்து கொள்வதில் நமக்கு சிரமம் ஏற்படுகிறது.
எந்த இயக்க அமைப்பை பயன்படுத்துவதாக இருந்தாலும் அதனதன் ஆவணங்களை அந்தந்த இயக்கத்தின் அமைப்புகளுக்காக பிரிக்கப்பட்ட நினைவக பகுதியில் வைத்துவிடுவதே சுலபமாக அனுகுவதற்கான வழியாகும். இவ்வாறே வைத்து இவ்விரண்டையும் இயக்கி கொண்டிருக்கும்போது பிரச்சனை ஏதுமில்லை ஆனால் விண்டோஸை புதுப்பித்தல் மேம்படுத்துதல் அல்லது நிகழ் நிலைப்படுத்துவதற்காக இதற்கான கோப்புகளை மறுபடியும் நிறுவும்போது இரட்டை செயல்பாட்டின் கோப்புகள் அழித்து நிறுவப்பட்டுவிடுகிறது. அதனால் இரட்டைசெயல்பாடு தடுக்கப்படுகிறது.
நினைவகபிரிவினையை திட்டமிடுதல் : விண்டோ இயக்கத்துடன் இருக்கும் கணினியில் லினக்ஸ் இயக்க முறைமை அமைப்பை நிறுவ விரும்பினால் இரண்டு இயக்க முறைமை அமைப்பிற்கும் தனித்தனியாக நினைவகத்தை பாகப்பிரிவினை செய்வதே சிறந்த வழிமுறையாகும்.
தொழிலகஅமைப்புசாளர பதிப்பாக factory setting version of window இருந்தால் நினைவகம் முழுவதையும் ஆக்கிரமித்து வன்தட்டின் hard drive 40GB கொள்ளளவு நினைவகத்தையும் இது அபகரித்து கொள்கிறது.அதனால் இதே கணினியில் லினக்ஸை நிறுவதற்கான இடமில்லாமல் தவிக்கவேண்டியுள்ளது,
சமீபத்தில் வெளியாகும் பெரும்பாலான லினக்ஸ் பதிப்புகள் இவ்வாறானஇட நெருக்கடியை எவ்வாறு சமாளித்து தமக்கு வேண்டிய இடத்தை பிடிப்பது, விண்டோவை எவ்வாறு அதன் பகுதிக்குள்ளேயே மடக்கி உட்கார வைப்பது முக்கிய கோப்பு அமைப்பு மற்றும் மெய்நிகர் நினைவகம் Swap ஆகியவற்றிற்கான இடத்தை எவ்வாறு ஒதுக்குவது என திட்டமிடப்பட்டே வருகின்றன.
இப்போது கிடைக்கின்ற லினக்ஸ் இயக்க அமைப்பு வன்தட்டில் 2 அல்லது 3 GB அளவிற்கு இடமிருந்தால் சுலபமாகவும் எளிதாகவும் நிறுவி அமர்ந்துவிடுகிறது. ஆனால் இதனுடன் சேர்ந்து வருகின்ற பயன்பாட்டு நிரல்தொடர்களுக்குதான் இவ்வாறு நிறுவப்படும்போது கூடுதல் இடம் தேவைப்படுகிறது.
அதற்காக விண்டோஸ் நினைவக பிரிவினை பகுதியில் உள்ள தேவையற்ற நிரல் தொடர்கள், கோப்புகளை நீக்குதல் மற்றும் கோப்புகளை நெருக்கி அமைத்தல் மூலம் லினக்ஸ் உடன் இருக்கும் பயன்பாட்டு நிரல் தொடர்களுக்கு தேவையான கூடுதல் இட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியும்.
லினக்ஸ் இயக்கமுறைமை அமைப்பை நிறுவுவதற்கு முன்பு கீழ்காணும் முக்கிய செய்தியை கருத்தில் கொள்ளுங்கள். விண்டோ எக்ஸ்பி மற்றும் 2000 ஆகியவைகளின் இயல்புநிலை Default கோப்பு அமைப்பு NTFS ஆகும். இதனை லினக்ஸ் இயக்க முறைமை அமைப்பால் படிக்க மட்டுமே முடியும் எழுத முடியாது. விண்டோவின் எந்த பதிப்பும் லினக்ஸின் நினைவக பிரிவினை பகுதியில் உள்ள கோப்பு அமைப்பை எழுதவும் படிக்கவும் செய்யாது. இந்த இரண்டு அடிப்படை வேறுபாட்டு தன்மையால் ஒரே கணினியில் இரண்டு இயக்க முறைமை அமைப்புகளை சுலபமாக நிறுவி இயக்க முடியாத நிலைமையாக உள்ளது.
அதிஷ்டவசமாக NTFS மட்டுமே விண்டோவின் கோப்பு அமைப்பு அன்று. FAT32 கோப்பு அமைப்பை விண்டோ எக்ஸ்பி ஆதரிக்கின்றது. விண்டோ 98, விண்டோ me ஆகிய பதிப்புகளிலில் NTFS கோப்பின் பாதுகாப்பற்ற தன்மையாக இருப்பதால் லினக்ஸிலிருந்து படிக்கவும் எழுதவும் முடிகிறது.
இதனடிப்படையில் பார்க்கும்போது சுலபமான வழியாக இரண்டு இயக்க முறைமை அமைப்புகளையும் தனித்தனியாக FAt32 கோப்பு அமைப்பின் அடிப்படையில் நினைவகத்தைபிரித்து உருவாக்கி அமைப்பதுதான் சிறந்த வழியாகும்.
இவ்வாறான நினைவகத்தை பாகப்பிரிவினை செய்வது நடப்பில் இருக்கும் நினைவக பிரிவினையுடன் ஏற்கனவே நினைவகத்தில் காலியாகஉள்ள இடத்தையும் சேர்ப்பது மிகச்சுலபமாகும்.
புதிய FAT32 கோப்பு அமைப்பின் நினைவக பிரிவினை விண்டோ எக்ஸ்பியில் கணினி மேலாண்மையின் வன்தட்டு மேலாண்மை பகுதியை பயன்படுத்தி கருவி மூலம் உருவாக்க முடியும். இதனை கட்டுப்பாடு பலகத்தின் Control Panel நிர்வாக கருவி மடிப்பில் Administrative Tools folder காணலாம்.
விண்டோ நினைவக பிரிவினை வன்தட்டின் நினைவகத்தை முழுவதும் ஆக்கிரமித்து கொள்ளும்போது வன்தட்டு மேலாண்மை கருவி Disc Segment Tool பிரிவினை உருவாக்கவும் நீக்கமட்டும் பயன்படுகிறது. ஆனால் அளவை குறைக்க அனுமதிக்காது. இந்த நிலையில் சந்தையில் கிடைக்கும் Symantec’s Norton partition magic 8.0 என்ற மென்பொருளை பயன்படுத்தி நடப்பில் உள்ள நினைவக பிரிவினையின் அளவை சுருக்கி அமைக்க முடியும்.
அடடா இதற்காக பணம் செலவிட்டு இந்த மென்பொருளை வாங்க வேண்டுமா என எண்ணுகிறீர்களா? கவலைப்பட வேண்டாம். http://partitionlogic.org.uk என்ற இணையத்தளத்திலிருந்து இலவசமாக இதனை இறக்குமதி செய்து குறுவட்டில் பதிந்துகொண்டு அதிலிருந்து கணினியில் புதியதாக நினைவக பிரிவினை உருவாக்கவும், நடப்பில் இருக்கும் பிரிவினையை சுருக்குதல் செய்யவும் முடியும்.
இதற்கு பதிலாக லினக்ஸ் உடன் கிடைக்கும். GNU பதிப்பாளர் பயன்பாட்டை பயன்படுத்தி ஆபத்திலிருந்து காக்கும்நிலை rescue Mode முறைமையில் பிரிவினை அளவை சுருக்குதல், புதியதாக உருவாக்குதல் செய்ய முடியும்.
வேகமாக உடனடியாக நினைவக பிரித்தல் கருவியான parted tool பயன்படுத்தலில் திறமை அதிமாக்குதவற்கு நேரடியாக இணையத்திலிருந்து இதற்கான ஆவணங்களை படித்தறிவதே சிறந்த வழியாகும்.
விண்டோவிலிருந்து லினக்ஸின் நினைவக பிரிவினையில் உள்ள கோப்பினை படிப்பதற்காக மீண்டும் நினைவக பிரிவினை செய்வதைவிட விண்டோவில் உள்ள Ext2 என்ற கோப்பு அமைப்பை நிறுவுவதுதான் சிறந்த வழியாகும். www.fsdriver.org ஆனால் NTFS நினைவக பிரிவினை அமைப்பில் உள்ள கோப்பினை லினக்ஸிலிருந்து இதனை படிக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒரு இயக்க அமைப்பு இயங்க ஆரம்பிக்கும்போது நடைபெறும் செயலை முதன்மைதொடக்கஇயக்கம்(Master Boot) என்றழைக்கப்படும். வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் ஒதுக்கப்பட்டுள்ள boot loader என்ற சிறிய நிரல் தொடர் இதனை கண்காணிக்கிறது.
கணினியை இயக்குவதற்காக மின் இணைப்பு கொடுத்தவுடன் முதன்மைதொடக்கஇயக்க(Master Boot)த்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள Boot Load என்னும் நிரல் தொடர் உடன் இயங்க துவங்கும். இது இயக்க அமைப்பை நினைவகத்தில் ஏற்றத் தொடங்கும் அல்லது இயக்கமுறைமை அமைப்பு பட்டியை தெரிவு செய்ய வேண்டிய காட்சியாக பிரதிபலிக்கும்.
விண்டோ பயன்பாடு உள்ள கணினியில் லினக்ஸ் இயக்க முறைமை அமைப்பை நிறுவிய பிறகு லினக்ஸின் Boot Loadஆன Grand Unix boot loader என்பதை சுருக்கமாக அழைக்கப்படும். GRUB என்பது பயன்படுத்துகின்ற எந்த விண்டோவின் NTLDR Boot Load ஐ பதிலீடு செய்கிறது.
இந்த NTLDR க்கு boot part என்றழைக்கப்படும் இலவச பயன்பாட்டை உபயோகித்து லினக்ஸ் உடன் சேர்த்து நிறுவுவது நல்லதொரு வழியாகும். www.winimege.com/bootpart.htmஆனால் இது ஒரு சிக்கலான துன்பம் தரும் வழிமுறையாகும். ஆயினும் மீண்டும் விண்டோவை மறு நிறுவுதல் செய்தால் லினக்ஸ் boot loader இல் NTLDR உடன் அழித்து எழுதிவிடுகிறது. மேலும் லினக்ஸ் இயக்க அமைப்புடன் இயங்க விரும்பும் வாய்ப்பையும் நீக்கிவிடுகிறது.
சே என்னடா இது பெரிய தலைவலியாக போய்விட்டது என சலித்து கொண்டு உடன் லினக்ஸ் நிறுவுவதை பயன்படுத்தி இதில் உள்ள ஆபத்து காப்பான் (rescue mode) மூலம் லினக்ஸின் தொடக்கஇயக்க மேலாளரை மறுநிறுவுதல் செய்ய முடியும். லினக்ஸ் நினைவக பிரிவை கண்டுபிடிப்பதற்கு GRUB எனும் தொடக்கஇயக்க கட்டளை வரி பதிப்பை பயன்படுத்த முடியும். பிறகு வன்தட்டில் உள்ள முதன்மை இயக்க பதிவேட்டில் முதன்மை தொடக்கஇயக்க GRUB யை மறு நிர்ணயம் செய்ய முடியும். இங்குதான் பெரும்பாலான இரட்டைஇயக்கமுறைமை அமைவு அமர்ந்ருக்கும்.வேறு எங்காவது இருந்தால் உடன் GRUB ன் செயல் விளக்ககையேட்டை manual படித்து GRUB ஐ முதன்மை இயக்க பதிவேட்டில் கொண்டு வாருங்கள்.
இவ்வாறு இரட்டை செயல்பாட்டை முதன்மை தொடக்க இயக்க பதிவேட்டில்(Master Boot Record)) அமைத்தும் கோப்புகளை FAT 32 அமைப்பாகவும் வைத்து விண்டோ, லினக்ஸ் என்ற இரட்டை குதிரைகள் மீது மிக லாவகமாகவும் சுலபமாகவும் சவாரி செய்ய முடியும்.
0 கருத்துரை:
Post a Comment