Thursday, July 5, 2012

ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!

ஹிக்ஸ் போஸான் எனப்படும் 'சக்தி ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்! கடவுளின் அணுத்துகள் என்று அழைக்கப்படும் ஹிக்ஸ் போஸான் இருப்பது 99.999% உறுதி செய்யப்பட்டுள்ளதாக இது தொடர்பான ஆராய்ச்சியை நடத்தி வரும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இதன்மூலம் ஹிக்ஸ் போஸான் இருக்கிறதா இல்லையா என்பது தொடர்பான கேள்விகளுக்கு ஓரளவுக்கு விடை கிடைத்திருக்கிறது. Big Bang எனப்படும் பெரு வெடிப்பைத் தொடர்ந்தே அணுக்களும், மூலக்கூறுகளும், கிரகங்களும், இந்த பேரண்டமும் (universe) உருவாயின என்பது தியரி. இதன்படி பிக் பேங் வெடிப்பு நிகழ்ந்த கணத்தில் அணுக்கள் ஒலியை விட பயங்கரமான வேகத்தில் எல்லா திசைகளிலும் சிதறின. அப்போது அந்த அணுக்களுக்கு எந்த நிறையும் (mass) இல்லை. ஆனால், ஹிக்ஸ் போஸான் எனப்படும் 'சக்தியோடு' அவை தொடர்பு கொண்ட பிறகே அந்த அணுக்களுக்கு நிறை கிடைத்தது. இது தான் இந்த பேரண்டம் உருவானதன் அடிப்படை என்று சொல்கிறது ஸ்டாண்டர்ட் மாடல் தியரி. இந்த கோட்பாட்டின்படி (தியரி) இந்த யுனிவர்ஸ் உருவாக முக்கிய அடிப்படையாக இருந்தவை 12 வகையான அணுத் துகள்கள். அடுத்தடுத்து நடந்த ஆய்வுகளில் 11 அணுத் துகள்கள் அடையாளம் காணப்பட்டுவிட்டன. அவை இருப்பதையும் பார்த்துவிட்டோம். ஆனால், இதுவரை கண்ணுக்குப் புலப்படாத 'சூப்பர் ஸ்டார்' தான் ஹிக்ஸ் போஸான். சரி, இதைத் தான் கண்டுபிடிக்கவே முடியவில்லையே, விட்டுவிட வேண்டியது தானே என்றால், அதுவும் முடியாது. காரணம், அது இந்த யுனிவர்ஸ் உருவானது தொடர்பான ஒட்டு மொத்த தியரிகளையும் குப்பைக்குக் கொண்டு போய்விடும்.

Sunday, December 11, 2011

பின்லேடனை கொல்ல பயன்படுத்திய விமானம் ஈரான் வசம்.... கதிகலங்கியது அமெரிக்கா...!!! நடந்தது என்ன...???

பல்லாயிரக் கணக்கான அடிகளுக்கு அப்பால் இருந்து ஈரானை உளவு பார்த்த அமெரிக்க CIA உளவு விமானம் RQ-170 ஈரான் படையிடம் சிக்கியது...

Thursday, December 1, 2011

என் மகள்களின் மூன்று கேள்விகள் ? சகோதரி லாரன் பூத்,பிரிட்டன்.

நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.இஸ்லாமை ஏற்றபோது நான் பெற்ற மனஅமைதி இன்னும் என்னைவிட்டு விலகவில்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் விலகாது !...............................................................................

லாரன் பூத் (Lauren Booth) - அரசியல் விமர்சகர், ஊடகவியலாளர், பாலஸ்தீன மக்களுக்காக போராடியவர்/போராடிக்கொண்டிருப்பவர்.

இவற்றிற்கெல்லாம் மேலாக, பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் நெருங்கிய உறவினர் என்ற அடையாளம். சென்ற ஆண்டு இவரது பெயரை உலகின் மூளைமுடுக்கெல்லாம் கொண்டுபோய் சேர்த்தன ஊடகங்கள்.


அதற்கு காரணம், நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததுதான். ஆம், அவர் இஸ்லாமை தழுவிய அந்த நிகழ்வுதான் காரணம்.

Wednesday, November 30, 2011

முல்லைப் பெரியாறு அணை

கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணை 136 அடியை எட்டியவுடன், கேரள மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் முயற்சிகளும், இந்தத் தருணத்தை அரசியலாக்கும் முயற்சிகளும் தொடங்கிவிட்டன. 

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 155 அடி. 1979-ம் ஆண்டு வரை இந்த அணையில் எந்தப் 
பிரச்னையும் இல்லாமல் 152 அடி உயரம் வரை தண்ணீர் தேக்கப்பட்டு வந்தது. ஆனால், அணைப் பகுதியில் நிலநடுக்கம் என்ற தவறான செய்தி ஏற்படுத்திய பீதியின் காரணமாக, நீரைத் தேக்கிவைக்கும் அளவை 136 அடி உயரமாகக் குறைத்துக்கொள்ள தமிழக அரசு முன்வந்தது. இப்போது இந்த 136 அடியை தண்ணீர் எட்டியதும், அணை உறுதியாக இருப்பது தானே அம்பலப்பட்டுவிடுமே என்கின்ற பயம் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஏற்பட்டுவிட்டது.

Thursday, November 24, 2011

நீரிழிவு அறிந்துக்கொள்ளுங்கள், நிம்மதியாக வாழுங்கள்



அவர் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பில் இந்திய ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற மிக உயர் அதிகாரி. ஒருமுறை கவர்னர் மாளிகையில் அரசின் ஓர் முக்கிய விருந்தில் கலந்து கொண்டு இரவு 9-9.30 மணி அளவில் வீட்டிற்கு திரும்பியதும் அவருக்கென தயாராக இருந்த ராகி தோசையை சாப்பிடத் துவங்கினார். அருகில் இருந்த நான் ”கவர்னர் மாளிகையில் சாப்பிடலையா?,” என்றதும், ”இன்றைக்கு 75 வயதிலும் ஆரோக்கியமாக, 32 வருட காலமாக சர்க்கரை வியாதி இருந்தும் எந்த தொல்லையும் இல்லாமல், ஏராளமான மருந்துகளின் பிடியிலும் இல்லாமல் இன்றும் உழைக்க முடிகிறதென்றால் அதற்கு இந்த உணவுக் கட்டுப்பாடும் ’விருந்துகள் வேண்டாம்’ என்ற மன உறுதியும் தான் காரணம்,” என்றார். இன்றைக்கும் அவர் மழைக் காலத்தில் குடை பிடித்துக் கொண்டு வாக்கிங் போவது அவர்தம் உடல் மீதான அக்கறைக்கான இன்னொரு அடையாளம்.

Wednesday, November 23, 2011

‘சித்தி ஜூனைதா – தமிழ் இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’

siddhi-2தமிழ்க்கூறும் நல்லுலகிற்கு உ.வே.சா ஒரு தமிழ்த்தாத்தா !!!
சித்தி ஜூனைதா பேகம் ஒரு தமிழ்ப் பேத்தி ???




‘சித்தி ஜூனைதா – இஸ்லாமிய முதல் புரட்சிப் பெண் படைப்பாளி’ என்ற தலைப்பில் டாக்டர் கம்பம் சாஹூல் ஹமீது அவர்கள் எழுதிய கட்டுரை (தினகரன் – ரம்ஜான் மலர் 2002 ) :

இஸ்லாமிய பெண்களில் முதன்முதலில் நாவல் படைத்திட்ட புரட்சிப் படைப்பாளி சித்தி ஜூனைதா பேகம்  இவர் யார்? இவரைத் தந்த ஊர் எது ? இவரை ஏன் புரட்சிப் படைப்பாளி என்று அழைக்க வேண்டும்? அப்படி என்னதான் செய்தார்? இதுபோன்ற ஆர்வமிக்க பல சந்தேகங்களுக்கு விடை அளிப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

Monday, November 21, 2011

மைதா மாவை ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.


நன்கு அரைக்கப்பட்ட கோதுமையுடன் பென்சாயில் பெராக்ஸைட் சேர்த்த பின்னர்
உருவாவதுதான் “மைதா”. இந்த மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் எதுவும்
உடலுக்கு நன்மை செய்வதை விட தீங்குகளைத் தான் தருமாம். இந்த மைதா மாவை
ஐரோப்பியன் யூனியன் தடை செய்திருக்கிறதாம்.
மைதா உணவுகள் கிட்னி ஸ்டோன் உருவாக காரணமாக இருக்கின்றனவாம்.
அதுமட்டுமல்ல இதய சம்பந்தமான நோய்களையும் உருவாக்கும் என்று கோழிக்கோடு
மெடிக்கல் கல்லூரியில் அசிஸ்டண்ட் புரபசராக வேலை செய்யும்டாக்டர் மாயா
சொல்லி இருக்கிறார் என்கிறது அப்பத்தி.

ஜப்பானியர்களின் ஆச்சர்யமான தொழில்நுட்பம்

wmc

நமது கர்ப்பனைகளுக்கு எட்டாத

ஜப்பானியர்களின் ஆச்சர்யமான தொழில்நுட்பம்
         



யூகிக்க முடிகிறதா உங்களால் ?

Friday, November 18, 2011

அண்ணா ஹசாரே – கார்ப்பரேட் மீடியா கண்டெடுத்த கோமாளி!

நூறு கோடிக்கு மேல் மக்கட்தொகை கொண்ட இந்த நாட்டில் ஊடகங்களுக்கு பத்து நாட்கள் வேறு செய்தியே கிடைக்கவில்லை. எங்கள் சானல் வழியாகத்தான் அண்ணா ஹசாரே மக்களிடம் பேசுகிறார் என்றெல்லாம்கூடத் தொலைக்காட்சிகள் சொல்லிக்கொண்டன. முதலில் இதுவே மிகப்பெரியதொரு ஊழல். ஊடகங்களுக்கு உரிமம் கொடுத்திருப்பது செய்திகள் தருவதற்கு; யாருக்காகவோ பிரச்சாரம் செய்வதற்கு அல்ல. பிரச்சாரம் செய்வது என்றே கொண்டாலும், எல்லா சானல்களும் அதைச் செய்யக் காரணம் டி. ஆர்.பி ரேட்டிங்க்தான். அதுதான் விசயம் என்றால் நீலப்படங்களைப் போட்டு சம்பாதிக்க வேண்டியதுதானே”  அருந்ததி ராய் (ஜன் லோக்பால் குறித்த பேட்டி, சி.என்.என். ஐ.பி.என் தொலைக்காட்சி ) கடுமையான வார்த்தைகளாகத் தோன்றினாலும் நூற்றுக்கு நூறு உண்மைதான். ராம் லீலா மைதானத்தின் மேடையில் அண்ணா ஹசாரே போராடிக் கொண்டிருந்தார்.

ஜோசப் கண் மருத்துவமனையை கூண்டிலேற்றி HRPC சாதனை!

2008-ஆம் வருடம்  பெரம்பலுர் ஜோசப் கண் மருத்துவமனை, விழுப்புரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாமில் விழுப்புரம் மாவட்டம், நைனார் பாளையம், கடுவனுர் கிராமத்தை சேர்ந்த 66 பேர் தேர்வு செய்யப்பட்டு கண் புரை அறுவை சிகிச்சை செய்ததில் அனைவருக்கும் கண் பார்வை முழுமையாக பறிபோனது .மருத்துவர்கள், பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த செய்தியை சொல்லாமல் சொட்டு முருந்தும், வெள்ளை மாத்திரையும் கொடுத்து அனுப்பிவிட்டனர்.விஷயம் வெளியே தெரிந்தவுடன் தமிழுக அரசு அவசரமாக மருத்துவ  விசாரணை  குழு அமைத்து இழப்பீடாக தலா 1 லட்சம் கொடுத்து பிரச்சினையை சுமுகமாக மூடி விட்டது. அன்றைக்கு சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்.

சாதி, சமயம் குறிப்பிடாமல் பள்ளிகளில் சேர்க்க முடியும்!

எமது தோழர்கள் அவர்களது குழந்தைகளை பள்ளியில் சாதி, மதமற்றோர் என்று சேர்க்கும் போது அநேக பள்ளி நிர்வாகங்கள் – அரசு பள்ளிகளையும் உள்ளிட்டு – மறுத்து விடுவது வழக்கம். பின்னர் தோழர்கள் அப்படிச் சேர்க்க முடியுமென்ற அரசாணையை நகலெடுத்து நிர்வாகத்தினருக்கு எடுத்துச் சொல்லி சேர்ப்பது வழக்கம். இது போக தோழர்கள் கைதாகி காவல் நிலையத்திற்கோ, சிறைக்கோ செல்லும் போதும் சாதி குறிப்பிடச் சொல்லி அதிகாரிகள் மிரட்டுவது வழக்கம். அங்கேயும் ஒவ்வொரு முறையும் போராட்டத்தின் மூலமே சாதி அடையாளங்களை மறுத்து தமது விவரங்களை தோழர்கள் பதிவிடுகிறார்கள்.

சங்கப் பரிவாரம் வழங்கும் “”இதுதான்டா ராமாயணம்!”

சங்கப் பரிவாரம் வழங்கும் இதுதான்டா ராமாயணம் ! புராணக் கதைகளை விமர்சனரீதியாகப் பார்க்கக்கூடாது என ஆர்.எஸ்.எஸ். கட்டளையிடுவதும், மதச்சார்பற்ற காங்கிரசு கூட்டணி அரசின் கட்டுப்பாட்டிலுள்ள டெல்லிப் பல்கலைக்கழகம் அப் பத்வா விற்குப் பணிந்து போவதும் சகிக்கமுடியாத வெட்கக்கேடு.










வரலாறு  சொல்லித்தர வாரியாரு வருவாரு”  இது, இந்து மதவெறிக் கும்பல் அதிகாரத்தில் இருந்தால் கல்வித்துறையில் என்ன நடக்கும் என்பதை நையாண்டி செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பாடல் வரி.  இந்த நையாண்டி வெறும் கற்பனையல்ல, உண்மை என்பதை அண்மையில் டெல்லியிலுள்ள மத்தியப் பல்கலைக்கழகமான டெல்லிப் பல்கலைக்கழகத்தில் நடந்துவரும் சம்பவங்கள் நிரூபித்து வருகின்றன.

ஸ்பெக்ட்ரம் இழப்பு குறித்த மிகை மதிப்பீட்டின் பின்னணியில் பாஜக?

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் ரூ.1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறிய மத்திய தலைமைக் கணக்கு அதிகாரி, வினோத் ராய் அந்த அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்வதற்கு முன்பாக, பாஜக மூத்த தலைவரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவருமான முரளி மனோகர் ஜோஷியை சந்தித்துப் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இன்று வினோத் ராய் நாடாளுமன்றக் கூட்டுக்குழு முன்பு ஆஜராகி விளக்கம் தந்தார்.2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, தவறான முறையை கையாண்டதால் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக அறிக்கையை வெளியிட்டவர் வினோத் ராய்.

சாதிப் பெயரில் கொண்டாட்டம் – மன்னிப்புக் கேட்டது பேபால் (Pay Pal) நிறுவனம்!


சென்னை: சாதிப் பெயரில் பணியாளர்கள் கொண்டாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்த பேபால் நிறுவனம், அதற்காக மன்னிப்புக் கோரியுள்ளது. இந்த கொண்டாட்டம் தொடர்பான விளம்பர தட்டிகளையும் அகற்றியது.சென்னை ஐடி எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ளது அமெரிக்க நிறுவனமான பேபால் அலுவலகம்.


சமீபத்தில் தனது நிறுவன ஊழியர்களுக்காக டும்டும்டும் என்ற பெயரில் ஆண்டு விழா கொண்டாட்ட நிகழ்ச்சியை அறிவித்தது. இந்திய பாரம்பரிய திருமணம்தான் இந்த நிகழ்ச்சியின் கரு. அதில் அந்நிறுவனத்தின் பணியாளர்களை ஆறு அணிகளாகப் பிரித்துள்ளனர். அவற்றில் மூன்றின் பெயர் தமிழ் நாட்டின் அய்யர்கள் (Iyers of Tamil Nadu), குஜராத்தின் பட்டேல்கள் (Patels of Gujarat), வங்காளத்தின் பானர்ஜிகள் (Banerjees of Bengal)  என்று இருந்தது. பெரிய விளம்பர தட்டிகளில் இந்தப் பெயர்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

எல்லாவற்றிலும் மூக்கை நுழைப்பதா…’ – ஹஸாரேவுக்கு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் கடும் கண்டனம்!

பாட்னா: தனது அரசு குறித்து குறை கூறிய அன்னா ஹசாரேவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் பிகார் முதல்வர் நிதிஷ் குமார்.ஊழலை ஒழிக்க பிகார் அரசு கொண்டு வரப்பட்டுள்ள லோக் ஆயுக்தா சட்ட மசோதா சரியில்லை என்று அன்னா ஹசாரே கூறியிருந்தார்.இது குறித்து கருத்துத் தெரிவித்த நிதிஷ் குமார், நான் மக்களுடன் தொடர்பில் இருக்கும் ஒரு முதலமைச்சர். அவர்கள் என்ன நினைக்கிறார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் எனக்கு நன்றாகவே தெரியும். என்னை மக்கள் அறிவார்கள். அது சரியில்லை இது சரியில்லை என்று குறை கூறிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை, அவர்களது சான்றிதழும் எனக்குத் தேவையில்லை.

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP