விக்கி லீக்ஸ் ஆதரவாளர்கள் கிரெடிட் கார்ட் இணையத்தை தாக்கினர்
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் பல இரகசியச் செய்திகளை வெளியிட்டு வரும் விக்கி லீக்ஸ் நிறுவனம் தொடர்ந்தும் இயங்க பண உதவிகள் கோரப்பட்டன. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் மாஸ்டர் கார்ட் மற்றும் விசா கார்ட் மூலமாகவும் மற்றும் பே பால் மூலமாகவும் அவர்களுக்கு நன்கொடை வழங்கிவந்தனர். இதனைத் தடுக்க அமெரிக்க அரசு புதிய மறைமுக நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் மாஸ்டர் கார்ட், விசா, மற்றும் பே பால் ஆகிய நிறுவனங்கள் மக்கள் இனிமேல் அந் நிறுவனத்துக்கு நன்கொடைகளைக் கொடுக்கமுடியாது என அறிவித்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இந்நடவடிக்கையால் ஆத்திரமடைந்த உலகெங்கிலும் வாழும் பல கணணி நுண் அறிவுள்ளவர்கள், ஒரு மென்பொருளைத் தயாரித்து உடனடியாகவே விசா, மாஸ்டர் கார்ட் மற்றும் பே பால் இணையங்களைத் தாக்கியுள்ளனர். வழமைக்கு மாறாக பலர் அவ்விணையங்களுக்கு செல்வது போல போலியான முறையில் இம் மென்பொருள் அவ்விணையத்துக்கு ஆட்களை அனுப்பும். இதனால் அவர்களின் சேர்வர் முடக்கப்பட்டது. நேற்றைய தினம் பே பாலின் இணையத்தளமும், மற்றும் மாஸ்டர் கார்ட் இணையமும் சில மணிநேரம் முடக்கப்பட்டுள்ளது.
தாம் தொடர்ந்தும் இந்நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்பட இருப்பதாக கணணி பாதாள உலகக் கோஷ்டியினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
தாம் தொடர்ந்தும் இந்நிறுவனங்களுக்கு எதிராகச் செயல்பட இருப்பதாக கணணி பாதாள உலகக் கோஷ்டியினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
0 கருத்துரை:
Post a Comment