Thursday, December 23, 2010

மகளை கொன்று இருதயத்தை கடவுளுக்கு படைத்த தாய் : இங்கிலாந்தில் சம்பவம்

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் ஜெரோம் நெக்னே. அவரது மனைவி ஷாய்னா பரூச்சி (35) சோமாலியாவை சேர்ந்த இவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர்.
இவர்களுக்கு “டீன்ஏஜ்” வயதில் 2 குழந்தைகளும், 4வயதில் ஒரு மகளும் இருந்தனர் இந்த நிலையில் 4 வயது மகளை திடீரென காணவில்லை.இதற்கிடையே அவரது வீட்டு சமையலறையில் இருந்து ரத்தத் தோய்ந்த மிக நீள மான கத்தியை அவரது “டீன்ஏஜ்” குழந்தைகள் கண்டெடுத்தனர். இது குறித்து தாயார் பரூச்சியிடம் துருவி துருவி விசாரித்தனர்.விசாரணையில் அவர் தனது 4 வயது மகளை கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவளது இருதயத்தை தூண்டாக வெட்டி எடுத்து சமையலறையில் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.இதுதவிர அவளது மற்ற உடல் உறுப்புகளையும் துண்டு துண்டாக வெட்டி தனது வீடு முழுவதும் ஆங்காங்கே வைத்து இருந்தாள். வயிற்றைகிழித்து குடலை எடுத்து அவளது உடலை வீட்டின் அருகே வீசியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
 இதனால் அதிர்ச்சி அடைந்த பரூச்சியின் குடும் பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து அவளை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் தனது மகளை பலி கொடுத்து உடலை கடவுளுக்கு அர்ப்பணம் செய்ததாக அவள் கூறினாள்.

முன்னதாக தனது வீட்டில் உள்ள வீடியோ பிளேயரில் மத சம்பந்தப்பட்ட கேசட்டை ஒளிப்பரப்பி பார்த்து கொண்டிருந்தாள். இந்த கொடூரதாயிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP