பெண்களுக்கு போதை லேகியம்… மயக்க பிரசாதம்… கல்கிகளின் காவாலித்தனங்கள்!
மக்கள் கடைசி வரை இப்படியேதான் இருக்கப் போகிறார்களா?
கல்கி பகவான் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் முன்னாள் எல்ஐசி ஏஜென்ட் விஜயகுமார் நாயுடுவும், அம்மா பகவான் எனப்படும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் பெண்களுக்கு போதை லேகியம் கொடுத்து வருவது உண்மைதான் என்று, அங்கு போய் வந்த பெண்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் வரதய்யபாளையம் மற்றும் திருவள்ளூருக்கு அருகில் உள்ள நேமம் போன்ற இடங்களில் இந்த விஜயகுமார் நாயுடு – புஜ்ஜம்மாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன.
இங்கு அப்பாயின்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு இந்த ஆசாமிகளைப் பார்க்க குறைந்தபட்சம் ரூ 25000 வரை வாங்குவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த இரண்டு பேரின் பாதங்களையும் கழுவி பூஜை செய்ய ரூ 5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும்.
ஏராளமான பணக்காரர்கள் இப்படி பணம் செலுத்தி பாதங்களைக் கழுவியுள்ளனர்.
ஒரு முறை இந்த ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டால், மீண்டும் ஊர் திரும்ப முடியாத அளவுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் பலரும். இதற்குக் காரணம் கல்கி ஆசிரமத்திற்கு வரும் பக்தர்களுக்கு தீட்சை அளிப்பதாக கூறி போதை மருந்து கலந்து பிரசாதம் வழங்கப்படுவதுதான் என்று ஏற்கெனவே டிவி சேனல்கள் வெட்டவெளிச்சமாக்கின.
போதை மருந்து சாப்பிட்ட பெண்கள் மயங்கிச் சரிவதையும், சில நேரத்தில் சுயநிலை மறந்து ஆட்டம் போடுவதையும் ஆந்திராவின் ஏ.பி.என். தெலுங்கு டி.வி. படம் பிடித்து ஒளிபரப்பியது. இதுநாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாலும், அடுத்த இரு தினங்களிலேயே மக்கள் அதை மறந்து, நித்யானந்தன் – ரஞ்சிதை கதைக்குத் திரும்பிவிட்டார்கள்.
கல்கி ஆசிரம மோசடி குறித்து ஆந்திர மாநில மனித உரிமை ஆணையம் மற்றும் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை கல்கி ஆசிரம நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணையே நடத்தவில்லை!
இதற்கு விஜயவாடாவை சேர்ந்த கல்கி ஆசிரம பெண் பக்தர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி கல்கி ஆசிரமத்துக்குப் போய், போதை அனுபவம் பெற்று இப்போது தெளிந்துவிட்ட பக்தர் சுதாராணி என்பவர் இப்படிக் கூறியுள்ளார்:
நான் கடந்த 6 ஆண்டுகளாக கல்கி ஆசிரமம் சென்று வருகிறேன். அங்கு தீட்சைகளால் கொடுக்கப்படும் லேகியத்தில் ஒருவித போதைப்பொருள் கலந்துள்ளது. அதை சாப்பிட்ட பெண்கள் பல மணி நேரம் மயக்க நிலைக்குச் சென்று விடுகிறார்கள். எனக்கும் இந்த அனுபவம் நேர்ந்துள்ளது. அதன்பிறகுதான் நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
இந்த லேகியம் சாப்பிட்ட பலர் சிறுநீரக கோளாறு, வயிற்று கோளாறு, இதய நோய், ரத்த அழுத்த கோளாறின் பிடியில் சிக்கி தவிக்கிறார்கள்.
இது பற்றி பல தடவை போலீசில் புகார் அளித்தும் இதுவரை கல்கி பகவானிடம் ஒருமுறை கூட விசாரணை நடத்தவில்லை. கல்கி பகவான், அம்மா பகவான் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் காவல்துறை. தங்களை கடவுள் என்று கூறி எங்களை ஏமாற்றி பல ஆயிரம் கோடி பணம் பறித்துவிட்டனர்.
எனவே, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து நாட்டுக்கு சொந்தமாக்கவேண்டும்.
இன்னொரு முக்கியமான விஷயம், தங்களை கடவுள் என்று கூறி ஏமாற்றி வரும் 2 பகவான்களும் பல்வேறு நோய்களின் பிடியில் சிக்கி உள்ளனர். கடவுளை எப்படி நோய் தாக்கும்? கடவுளே நோயாளியாக இருந்தால் பக்தர்களின் நோய்களை எப்படித் தீர்ப்பார்?" என்கிறார்.
இந்த சுதாராணியைப் போன்ற பலரும் இப்போது ஒன்றிணைந்து போர்க்கொடி தூக்கியுள்ளனர். பல்வேறு அமைப்புகளும் இவர்களுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளன.
இந்த முறையாவது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்குமா தெரியவில்லை.
மயக்க பிரசாதம் கொடுத்து கற்பழித்த சாமியார்!
இதற்கிடையே, ஆந்திர மாநிலத்தில் நாராயணசாமி என்ற சாமியார், தன்னைத் தேடி வந்து வணங்கிய பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்த கற்பழித்து, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளது போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
போலீசார் வரை விஷயம் போனது தெரிந்தவுடன் இந்த ஆசாமி தப்பி ஓடியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் பொதட்டூரில் உள்ளது இந்த நாராயணசாமியின் ஆசிரமம். அருள்வாக்கு கூறுவது இவரது தொழில். உப தொழிலாக கற்பழிப்பை கவனித்து வந்திருக்கிறார்.
இவர் அருள்வாக்கு கூறும்போது வெள்ளை நிற பேண்ட்- சட்டை அணிந்திருப்பார்.
அருள் வந்து ஆடும்போது காவி உடைக்கு ஷிப்ட் ஆகிவிடுவாராம். கணவனை இழந்த விதவைகள், வறுமையில் வாடும் பெண்கள்தான் இவரது டார்கெட்.
இந்தப் பெண்களை பூஜை அறைக்கு வரவழைக்கும் நாராயணசாமி அருள்வாக்கு கூறுமுன் இந்த பிரசாதத்தைச் சாப்பிடுங்கள் என்று கூறி ஒரு போதை மருந்தைதச் தருவார். அடுத்த சில நிமிடங்களில் மயங்கிவிடும் பெண்களை கற்பழித்து, அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். ஓரினச் சேர்க்கையும் உண்டு. அதற்கு தனது சீடர்களைப் பயன்படுத்திக் கொள்வாராம்.
இந்த வகையில் நாராயணசாமியால் நாசமாக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை ஏராளம். இப்போது அப் பெண்களில் இருவர் பொதட்டூர் போலீசில் புகார் அளித்தனர்.
இதையடுத்து நாராயணசாமி சாமியார் ஆசிரமத்தை சோதனை செய்யச் சென்றனர் போலீசார். அடுத்த நிமிடமே சாமியார் தப்பி ஓடிவிட்டார். அங்கு போலீசார் நடத்திய சோதனையில் ஏராளமான ஆபாச சி.டி.க்கள், ஆணுறைகள், வெளிநாட்டு செக்ஸ் சாதனங்கள் கைப்பற்றப்பட்டன.
ஆசிரம ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "சாமியார் நாராயணசாமி சில பெண்களுக்கு நள்ளிரவில்தான் அருள்வாக்கு கூறுவார். அப்போது பூஜை அறைக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.
தினமும் 4 மணி நேரமாவது ப்ளூ பிலிம் பார்ப்பார் சாமியார். இதற்காக பெரிய டி.வி.ஒன்றை தனது சொகுசு அறையில் வைத்துள்ளார். இது இங்குள்ள ஊழியர்கள் எல்லோருக்குமே தெரியும். சாமியாரின் மிரட்டலுக்கு பயந்து வெளியில் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் போலீசில் புகார் அளித்ததால் சாமியார் தப்பி ஓடிவிட்டார்" என்று கூறியுள்ளார்.
இப்படி இன்னும் எத்தனை கள்ளச்சாமிகள் முகமூடிகள் கழற்றப்படாமல் இருக்கின்றனவோ… மக்கள் கடைசி வரை இப்படியேதான் இருக்கப் போகிறார்களா? எத்தனை செய்திகள், ஆதாரங்கள், உதாரணங்கள் பார்த்தும் படித்தும் கூட திருந்தவில்லையே… இது மறதியா, அல்லது விரும்பிப்போய் விளக்குக்கு பலியாகும் விட்டில் மனப்பான்மையா?
-என்வழி
0 கருத்துரை:
Post a Comment