Saturday, August 7, 2010

உலகின் வெறுக்கத்தக்க நகரங்கள்: சென்னைக்கு 7-வது இடம்!

லண்டன்: எப்போதும் ஏதாவது ஒரு கணக்கெடுப்பு, வாக்கெடுப்பை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள் உலகத்தில். இவற்றில் நிறைய முரண்பாடுகள் இருந்தாலும், சில அடிப்படை காரணிகளை வைத்து இந்த கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

இவையெல்லாம் அதிகாரப்பூர்வமானவை இல்லையென்றாலும், மக்களின் கருத்துக்களைக் கேட்டு அவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்படுபவை.

இந்த முறை உலகின் மிகவும் வெறுக்கத்தக்க நகரங்கள் எவை என ஒரு பட்டியலைத் தயாரித்துள்ளனர் லோன்லி பிளானட் நிறுவனத்தினர். இதுதொடர்பாக சுற்றுலாப் பிரியர்களிடம் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 9 நகரங்கள் இடம்பெற்றுள்ள இந்த 'வெறுப்பு பட்டியலில்' நம்ம ஊர் சிங்காரச் சென்னையும் இடம்பெற்றுள்ளது.

இதற்கு இவர்கள் குறிப்பிட்டிருக்கும் காரணம் படுதமாஷ். மும்பை, டெல்லி, பெங்களூர் போல சென்னை இல்லையாம். பாலிவுட் போல ஹாட்டான சினிமா நட்சத்திரங்களும் இங்கில்லையாம். மற்ற நடிக நடிகையரை விட்டுத் தள்ளுங்கள்… அந்த பாலிவுட்டே வியந்து பார்க்கும் செல்வாக்கும் ஈர்ப்பு சக்தியும் மிக்க ரஜினியும், நடிப்பில் இந்தியாவே போற்றும் கமல்ஹாஸனும் இருப்பது இதே சென்னையில்தான் என்பதை மறந்துவிட்டார்களோ…

இன்னொன்று, ஹாலிவுட் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் இதே காரணங்களுக்காக வெறுக்கிறார்களாம்.

இதோ அந்த 9 நகரங்களின் பட்டியல்:

டெட்ராய்ட் (அமெரிக்கா):

detroit-என்வழி

உலகிலேயே மிகவும் வெறுப்புக்குரிய நகரமாக அமெரிக்காவின் டெட்ராய்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இந்த நகரின் அளவுக்கதிகமான குற்றங்கள், மாசு, மோசமான அடிப்படைக் கட்டமைப்பு போன்றவைதானாம். இதனால் சுற்றுலாப் பயணிகள் இதை நகரம் அல்ல நரகம் என்று வர்ணித்துள்ளனர்.

அக்ரா (கானா):

accra-என்வழி

அடுத்த இடத்தில் கானா நாட்டின் அக்ரா நகரம் உள்ளது. எங்கு பார்த்தாலும் அழுக்கு, இயற்கையான கடற்கைரையைக் கூட அசுத்தமாக வைத்திருப்பது என அக்ரா மீது புகார்களை அடுக்குகிறார்கள்.

சியோல் (தென் கொரியா):

seoul-sa-என்வழி

3வது இடத்தில் உள்ளது தென் கொரிய தலை நகரான சியோல். எப்போதும் நெரிசல் மிகுந்த இடமாகத் திகழும் சியோலில் குடிகாரர்களின் தொல்லை அதிகமாம். இங்கு அமைந்துள்ள சோவியத் பாணி கட்டடங்களில் எந்த அழகும் இல்லை என குற்றம் சாட்டுகிறார்கள்.

எப்போது பார்த்தாலும் மக்கள் பரபரவென திரிந்து கொண்டே இருப்பதால் இங்கு நிம்மதியாக ஒரு நாளைக் கழிப்பதே பெரிய விஷயம் என்பது வாக்களித்தவர்களின் ஏகோபித்த கருத்து.

லாஸ் ஏஞ்சல்ஸ் (அமெரிக்கா):

los-angeles-என்வழி

ஹாலிவுட் அமைந்துள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்று வாசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வெறுப்புக்குரிய நகரங்களின் வரிசையில் இதற்கு கிடைத்திருப்பது நான்காவது இடம்.
எப்போதும் பரபரப்பு, வாகன நெரிசல், மாசடைந்த சூழல் போன்றவை இந்த நகரை வெறுக்க வைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

வால்வர்ஹாம்ப்டன் (பிரிட்டன்):

wolverhampton-என்வழி
பிரிட்டனின் இந்த நகரம் எந்த சுவாரஸ்யமும் இல்லாத போரடிக்கும் நகரமாக சுற்றுலாப் பயணிகளால் குறிப்பிடப்படுகிறது.

சான் சால்வடார் (எல் சால்வடார்):

san-salvador

மத்திய அமெரிக்காவின் எல் சால்வடாரின் தலைநகரம் இது. அமெரிக்காவிலேயே அதிக மக்கள் தொகை, மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் இரண்டாவது இடம் சான் சால்வடாருக்குத்தான். இதன் போக்குவரத்து நெரிசலே அங்கிருந்து நம்மை விரட்டியடித்துவிடும் என்கிறார்கள்.

சென்னை (இந்தியா):

chennai-என்வழி

7வது இடம்தான் சிங்காரச் சென்னைக்கு. மும்பையைப் போன்ற செழிப்போ, டெல்லியைப் போன்ற வரலாறோ, பெங்களூரைப் போன்ற பரபரப்போ இங்கு இல்லையாம். மேலும் இங்குள்ள நடிகர், நடிகையரும் அவ்வளவு 'ஹாட்'டானவர்கள் இல்லையாம். சுற்றுச் சூழல், ட்ராபிக் மகா மோசம் என்கிறார்கள்.

அருஷா (தான்சானியா):

arusha-என்வழி

8வது இடத்தில் தான்சானியாவின் அருஷா. இங்குள்ள மலைக்கு மேரு என்று பெயர். எப்போதும் கூலான க்ளைமேட், அழகான இடங்கள் என்றாலும் இதனை துருப்பிடித்த நகரம் என்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் இந்த நகரை விட்டு வெளியேறுகிறீர்களோ அவ்வளவு உங்களுக்கு நல்லது என ஆய்வுகள் சொல்கின்றனவாம்.

செடுமல் (மெக்ஸிகோ):

chetumal

கடைசி இடம் இந்த நகருக்குதான். மாயா நாகரிகம் இருந்த இடங்களில் இதுவும் ஒன்று. ஆனால் இன்றோ, அளவுக்கதிகமான மக்கள், போக்குவரத்து நெரிசல், மோசமான குடிநீர், போக்குவரத்து நெரிசல் இப்படி பல நெருக்கடிகளால் வெறுப்புக்குரிய இடமாக மாறிவருகிறது.  நன்றி: என்வழி

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP