Saturday, August 14, 2010

தமிழகத்தில் புதிய கனிம வளங்கள்

ரு நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அதன் கனிம வளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தமிழகம் பல்வேறு கனிம வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அவற்றுள் முக்கியமாவனவை- பழுப்பு நிலக்கரி (Lignite), மேக்னசைட் (Magnasite), குவார்ட்ஸ் (Quaetz),, களிமண்  (Clay), சுண்ணாம்பு கல்  (Lime stone), பாக்ஸைட் (Bauxite), கிராபைட் மற்றும் கிரானைட் கற்கள்.

மேற்கண்ட கனிமங்கள் வர்த்தக ரீதியாக பூமியில் இருந்து தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த கனிமங்கள் கிடைக்கும் இடங்களையும், அதன் பயன்பாடுகளையும் கீழே பார்ப்போம். தமிழகத்தில் கிடைக்கும் முக்கிய கனிமங்களாவது,
பழுப்பு நிலக்கரி (Lignite): நெய்வேலி, ஜெயங்கொண்டம், இராமநாதபுரம் பகுதி மற்றும் மன்னார்குடியில் கிடைக்கிறது.


பயன்: மின் உற்பத்தி மற்றும் எரிபொருள்.

மேக்னஸைட் (Magnasite) : சேலம் (இங்கு உலகின் முக்கிய மேக்னஸைட் தாது கிடைக் கிறது), நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கிடைக்கிறது.

பயன்: உருக்காலைகளில் வெப்ப தடுப் பான்கள் (Refractory industry)

கிராபைட் (Graphite): சிவகங்கை, இராம நாதபுரம், மதுரை, திருநெல்வேலி மாவட்டங் களில் கிடைக்கிறது.

பயன்: உலோக உற்பத்தி, இரும்பு தாது பிரித்தெடுத்தல்

சுண்ணாம்புக்கல் (Lime stone): சேலம், பெரம்பலூர், திருநெல்வேலி, கரூர், நாமக்கல், கோவை மற்றும் மதுரை மாவட்டங்களில் கிடைக்கிறது.

பயன்: சிமெண்ட் உற்பத்திக்குரிய மூலப் பொருள்

பாக்ஸைட் (Bauxite): கொடைக்கானல், ஏற்காடு மற்றும் கொல்லிமலை ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது.

பயன்: அலுமினியம் உற்பத்திக்குரிய மூலப்பொருள்

சிலிக்கா  (Silica sand) : நாகப்பட்டினம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் கிடைக்கிறது.


பயன்: கண்ணாடி உற்பத்தி

கிரானைட் (Granite): திண்டிவனம், தர்மபுரி, சேலம், புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல், ஈரோடு மற்றும் வேலூர் மாவட்டங்களில் கிடைக்கிறது.


பயன்: கட்டிடங்கள் கட்டுவதற்கு பயன்படுகிறது.

மேற்கண்ட கனிமங்கள் பல ஆண்டுகளாக தமிழகத்தில் எடுக்கப்பட்டு பயன்படுத்தப் பட்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக இந்திய புவியியல் ஆய்வு துறை (Geological survey of india) தமிழகத்தில் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வுகளின் பலனாக, பல்வேறு புதிய/ முக்கிய கனிமங்கள் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளன. இவற்றின் மதிப்பீடு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

இரும்புத்தாது: "மேக்னடைட்' என்ற இரும்புத்தாது சேலத்தில் கஞ்சமலை, கோதுமலை பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 530 மில்லியன் டன்களுக்கு மேல் மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரும்பு தாது குறைந்த கிரேடாக (Low Grade) இருப்பதால் தற்போது வெட்டி எடுக்கப் படவில்லை. இருப்பினும் இரும்பு தாதுவின் விலை தொடர்ந்து ஏறி வருவதால், பல தனியார் நிறுவனங்களின் பார்வை இவற்றின் மீது விழத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தில் இரும்பு சுரங்கங்கள் சேலம் மாவட்டத்தில் வர வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் ஏற்படவும் சாத்தியங்கள் இருக்கின்றன.

டைட்டானியம் டை ஆக்ஸைடு :

ûட்டானியம் கடல் நீரால் அரிக்கப்படுவது இல்லை. இது அதிக கடினத்தன்மையும் குறைந்த எடையும் கொண்டுள்ளதால் பல் வேறு தொழில்துறைகளில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.இந்த உலோகம்  நீர்மூழ்கி கப்பல்கள், மருத்துவத் துறை, விண்கலங்கள், ராக்கெட்டுகள், விமான உதிரிபாகங்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த உலோகம் தூத்துக்குடி பகுதியில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இதை எடுக்க டீஸ்கோ (Tisco) கம்பெனியுடன் தமிழக அரசு 2002-ல் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ûட்டானியம் டை ஆக்ஸைடு கடலோர பகுதிகளில் மணலுடன் கலந்து காணப்படுகிறது. இதனால் இதனை எடுக்க அதிக நிலம் கையகப்படுத்த வேண்டி யுள்ளது. இந்த முயற்சியில் தற்போது டாடா நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

தங்கம்:

தமிழகத்தை ஒட்டியுள்ள கோலார் தங்கவயலின் தொடர்ச்சி  தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருப்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் மற்றும் வேப்பணப்பள்ளி போன்ற இடங்களில் தங்கம் உள்ளதை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படவில்லை. மேலும் கோத்தகிரி பகுதிகளிலும் தங்கம் இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. மதிப்பீடு இன்னும் செய்யப்படவில்லை.

பிளாட்டினம்:

பிளாட்டினம் தங்கத்தை விட பல மடங்க விலை உயர்ந்த உலோகம். தமிழகத்தில் பிளாட்டின படிவுகள் இருப்பதற்கான ஆதாரங்கள் தற்போது கிடைத்துள்ளன. தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம், சித்தம் பூண்டி, மேட்டுப்பாளையம், காரப்பாடி பகுதி களில் பிளாட்டினம் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த பிளாட்டினத்தை மதிப்பீடு செய்யும் பணிக்காக தமிழக அரசு, இந்திய புவியியல் ஆய்வு துறையுடன் தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த பிளாட்டினத்தின் அளவு மற்றும் தரம் போன்றவற்றை பரிசோதனை செய்தபின்புதான் இதை எடுக்க முடியுமா என்பதை கூறமுடியும். அதுவரை அந்தப் பகுதி மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை.

மாலீப்டீனம் :

இந்த உலோகம் ராக்கெட்டுகள், விமான உதிரிபாகங்கள், செயற்கைக் கோள்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படுகின்றன. இது தமிழ்நாட்டில் அரூர்- ஊத்தங்கரை, ஆலங் காயம், கரடிகுட்டம், புட்டட்டி போன்ற இடங்களில் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

அரூர், ஊத்தங்கரை பகுதிகளில் உள்ள மாலீப்டீனத்தை வணிக ரீதியாக எடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராயும் பணிகளில் தற்போது தமிழக அரசும் இந்திய புவியியல் துறையும் இணைந்து ஈடுபட்டுள்ளன.

கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு:

உலக அளவில் பெட்ரோல், டீசல், எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால், ONGC மற்றும் ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் இவற்றை தொடர்ந்து தமிழக கடலோர பகுதிகளில் ஆய்வுசெய்து வருகின்றன. இதன் பயனாக                தமிழ்நாட்டில் 28 இடங்களில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு படுகைகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும் இந்த இடங்களில் இருந்து எடுக்கும் பணிகளும் மேற்கொள்ளப் படுகின்றது. தற்போது சென்னை பெட்ரோலிய கார்ப்பரேஷன் இரண்டு இடங்களில் (நரி மணம், சென்னை) சுத்திகரிப்பு ஆலைகளை நிறுவி உள்ளன. மேலும் ரூ. 4790 கோடி செலவில் நாகார்ஜூனா எண்ணெய் நிறுவனம் கடலூரில் ஒரு சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளது. இங்கு 2011-ஆம் ஆண்டு உற்பத்தி தொடங்க உள்ளது. மேலும் காவிரி படுகைகளில் தொடர்ந்து எண்ணை வளங்களை தேடும்பணி நடந்து வருகிறது.

காவிரி படுகையை பொருத்தவரை எண்ணை படிவுகள் அதிக அளவில் கிடைக் கின்றன. தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் 1185 மீட்டர் ஆழத்தில் எண்ணை படிவுகளை கண்டுபிடித்துள்ளது.

தற்போது இந்தியா 70% கச்சா எண்ணையை இறக்குமதி செய்கிறது. உள்நாட்டு  உற்பத்தி வெறும் 30% மட்டுமே. இதனால் இந்திய நிலப்பரப்பை தவிர இந்திய கடல் பகுதிகளில் எண்ணை வளங்களை தேடும் பணிகளையும் அரசு முடுக்கிவிட்டுள்ளது. தமிழகத்தை ஒட்டியுள்ள வங்காள விரிகுடாவில் ONGC நிறுவனம் "செய்ஸ்மிக் சர்வே' என்ற சோதனையில் ஈடுபட்டுள்ளது. இந்த சோதனைகளின் முடிவுக்கு பின்னரே, தமிழகம் மற்றும் அந்தமான் இடையில் வங்கக் கடலின் அடியில் இருக்கும் எண்ணை வளங்களை பற்றிய தகவல்கள் முழுமையாக தெரியவரும். புதிய கண்டுபிடிப்புகள் தொடராவிட்டால் எதிர்காலத்தில் பெட்ரோல் விலை பலமடங்கு உயர வாய்ப்பு உள்ளது.

இந்த கட்டுரையாளர் ஏ.செந்தில்குமார் அவர்கள் தமிழகத்தில் தங்கம், பிளாட்டினம் கனிமங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். - செந்தில் குமரன் ஜியாலஜிஸ்ட்

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP