ஊழியர்களில் நான்கில் ஒருவர் வேலை பளுவால் அவதிப்படுவதாகவும், அவரது உடல்நலனில் ஆபத்தை எதிர்கொள்வதாகவும் அமெரிக்க ஆய்வு தெரிவிக்கிறது. வேலைச் சுமைக்கும் ஆரோக்கியத்துக்கும் உள்ள தொடர்பு குறித்து அமெரிக்காவின் பிசியோதெரபி அமைப்பு விரிவான ஆய்வு செய்தது. அதில் வெளியான முடிவுகள்:வேலைச் சுமையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2,600 பேரிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்களில் 4ல் ஒருவர் வேலை சுமையால் பாதிக்கப்படுவது தெரிய வந்தது. வேலை பளு அதிகமுள்ளவர்களில் 3ல் ஒருவர் மதிய உணவை புறக்கணிக்கின்றனர்.அதனால், முதுகு வலி, மனஅழுத்தம், இதய நோய்கள், பக்கவாதம் ஆகியவற்றை எதிர்கொள்கின்றனர்.
வேலைப் பளுவால் அவதிப்படுவோரில் பெரும்பாலோர் தங்கள் உடல் ஆரோக்கியத்தை பணயம் வைக்கின்றனர்.அதன்மூலம், அவர்களது தனிப்பட்ட வாழ்க்கைக்கும், பணியாற்றும் நிறுவனத்துக்கும் இழப்பை ஏற்படுத்துகின்றனர். அதாவது, ஊழியரின் வேலை பளு அவரை மட்டும் பாதிக்கக்கூடும் என்றுதான் நிறுவனங்கள் கருதுகின்றன. ஆனால், ஊழியரின் உடல்நலம் பாதிப்பதால், பணியில் திறமை குறையும், உற்பத்தி பாதிக்கும்.
அதன்மூலம், நிறுவனத்துக்கும் இழப்பு நேரிடுகிறது.வேலை பளு அதிகமுள்ள ஊழியர்களில் பெரும்பாலோர் மனஅழுத்தம் அடைவதும், அது தொடர்பான நோய் தாக்குதலுக்கு ஆளாவதும் தெரிய வந்துள்ளது என்கிறது ஆய்வு.இதுபற்றி ஆய்வுக் குழு நிபுணர் பில் கிரே கூறுகையில், “அதிக நேரம் உழைப்பது, இடையே ஓய்வை புறக்கணிப்பது ஆகியவற்றால் ஊழியர்கள் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக்கூடிய பாதிப்புகள் ஏற்படலாம்.
ஒரு சில ஊழியர்களுக்கு வேலைச்சுமையை அதிகரிப்பதன் மூலம் நிறுவனங்களுக்கும் பயனில்லை. அதனால், வேலையை முடிப்பதற்கான தகுதியை ஊழியர் இழந்து விடக்கூடும்” என்றார்.வேலைப் பளுவால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருவதாக ஜப்பானில் நடந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரை:
Post a Comment