பாக்.வெள்ளப்பகுதியில் காலரா பரவல்
பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களில் பெய்து வரும் பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைக்கு இது வரை 1600 பேர் பலியாகி உள்ளனர். தற்போது அப்பகுதிகளில் காலரா ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் உடமைகளை இழந்து மக்கள் அல்லல்படுகின்றனர். சுமார் 1 கோடியே 40 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதாக ஐ.நா.சபை மதிப்பீடு செய்து இருந்தது. ஆனால் 2 கோடிக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்துள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில் நேற்று 63-வது சுதந்திரதின விழா ஆகும். வெள்ளத்தினால் பேரழிவு ஏற்பட்டதால் அங்கு இந்த ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டது. அதிபர் சர்தாரி வெள்ளம் பாதித்த பகுதியில் முகாமிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். நிவாரண பணிகளை பார்வையிட்டார்.
இதற்கிடையே, வெள்ளப்பகுதியில் காலரா மற்றும் தோல் நோய்கள் ஏற்பட்டுள்ளன. சுவாத் பள்ளத்தாக்கில் காலரா நோய்க்கு ஒருவர் பலியாகியுள்ளார். அந்நோயினால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு சிகிச்சை அளிக்க முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கிமூன் இன்று பாகிஸ்தான் வருகை தர உள்ளார்.

0 கருத்துரை:
Post a Comment