Friday, October 28, 2011

சூரியனுக்கு இப்போது நடுத்தர வயது

பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லாவற்றுக்கும் முதலும் முடிவும் உண்டு.  இந்த விதி சூரியனுக்கும் பொருந்தும் என் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  சூரியனின் ஆயுள் ஆயிரம் கோடி வருடங்கள்.  இதில் 500 கோடி வருடங்களை சூரியன் கடந்து விட்டது.  இன்னும் சரியாக 500 கோடி வருடங்கள் உள்ளன.  இப்போது நடுத்தர வயது  நடந்து கொண்டு இருக்கிறது.

இன்னும் 500 கோடி வருடங்கள் எரியும் அளவிற்கு சூரியனில் சக்தி இருக்கிறது.  அதற்கு பின் சூரியனில் உள்ள ஹைட்ரஜன் காலியாகிப் போய் ஹீலியம் அதிகமாகும்.  அவ்வாறு மாறும்போது சூரியன் சிவப்பாகி வீங்க தொடங்கும்.  இந்த வீக்கம், ராட்சத நிலைக்கு வரும். இந்த நிலையில் சூரியன் 400 கோடி கிலோ மீட்டர் அளவுக்கு பெரிதாக விஸ்வரூபம் எடுக்கும்.  பூமி உள்பட சூரிய மண்டலத்தில் இருக்கும் அத்தனை கிரகங்களும் சூரியனுக்குள் சென்று விடும்.  இப்படி விஸ்வரூப நிலையில் 10 கோடி வருடங்கள் வரை சூரியன் இருக்கும்.  அதன்பின் சூரியன் சுருங்க தொடங்கும்.  பூமியில் பாதி அளவாக அது சுருங்கிவிடும்.  இந்த நிலையை 'வெள்ளைக்குல்லன்' என்று அழைக்கிறார்கள்.  இந்த நிலையில் அது வெகுகாலம் ஒளிவீசிக் கொண்டு இருக்கும்.

சூரியனின் நிறைவு காலத்தில் பூமியில் என்ன நடக்கும் என்று பார்த்தால் முதலில் ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் உள்ள பனிபாறைகள் உருகும்.  கடற்கரையோரப் பகுதிகள் கடலில் மூழ்கும்.  கடல்நீர் ஆவியாகி மேலே மேகங்கள் அதிகரிக்கும்.  இதனால் ஒரு போர்வை போல் பூமி கொஞ்சநாட்களுக்கு பாதுகாப்பாக இருக்கும்.  இறக்கும் தருவாயில் மனிதனுக்கு ஒரு தெளிர்ச்சி ஏற்படுமே, அதுபோல் இந்த பூமி பந்தும் அதுபோன்ற தருவாயில் கொஞ்சம் குளுமையடையும்.  சில காலம் கடந்தபின் கடல்நீர் வெப்பம் தாளாமல் கொதிக்க தொடங்கும்.  நம்மை சுற்றியுள்ள காற்றும் மண்டலம், பறந்து போகும்.  எல்லா உயிரினத்தின் ஆயுளும் முடியும். ( இது வரை நல்லாதான் போயிட்டு இருக்குது, இதற்கு மேல் நமது விஞ்ஞானிகள் சொல்வதையும் பாருங்கள்! )   இத்தனை இருந்தாலும் மனிதன் இதிலிருந்து தப்பித்துக் கொள்வான் என்று விஞ்ஞானிகள் ஆருடம் சொல்கிறார்கள்.

எப்படி இது சாத்தியம் என்றால் பூமியே மொத்தமாக சூரியனுக்குள் சென்று விடும்போது மனிதன் மட்டும் எப்படி தப்பிப்பான் என்று எதிர்கேள்வி கேட்டால் இதெல்லாம் நடைபெறும் காலகட்டத்தில் மனிதன், பரிணாம வளர்ச்சியில் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிக மிக முன்னேரியிருப்பான்.  இந்த முடிவை பற்றி ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்து வைத்திருப்பான்.  இப்போது எப்படி வேற்று கிரகத்தில் உயிரினம் இருக்கிறதா?  என்று ஆராய்ச்சி செய்வது போல அன்றைக்கு மனித இனம் வாழ்வதற்கு தோதான கிரகத்தையே அவன் கண்டுபிடித்திருப்பான்.  மொத்த மனித இனத்தையும் பூமியிலிருந்து அங்கு மாற்றம் செய்திருப்பான் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  அதனால் பூமி அழிவிலிருந்து மனிதன் தப்பித்துக் கொள்வான் என்கிறார்கள்.

- நன்றி தினத்தந்தி

அடுத்து, இறைவன் சொல்வதை பாருங்கள். ~~~~~~

சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-

நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-

மலைகள் பெயர்க்கப்படும் போது-

சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-

காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-

கடல்கள் தீ மூட்டப்படும்போது-

உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-

உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது-

“எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது?” என்று-

பட்டோலைகள் விரிக்கப்படும் போது-

வானம் அகற்றப்படும் போது-

நரகம் கொழுந்துவிட்டு எரியுமாறு செய்யப்படும் போது-

சுவர்க்கம் சமீபமாக கொண்டு வரப்படும்போது-

ஒவ்வோர் ஆத்மாவும், தான் கொண்டு வந்ததை அறிந்து கொள்ளும்.

எனவே, பின்னே விலகிச் செல்பவை (கிரகங்களின்) மீது சத்தியமாக-

முன் சென்று கொண்டிருப்பவை மறைபவை (மீதும்),

பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதும்,

மூச்சுவிட்டுக் கொண்டெழும் வைகறையின் மீதும் சத்தியமாக.

நிச்சயமாக (இக்குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும்.

(அவர்) சக்திமிக்கவர்; அர்ஷுக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர்.

(வானவர் தம்) தலைவர்; அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.

மேலும் உங்கள் தோழர் பைத்தியக்காரர் அல்லர்.

அவர் திட்டமாக அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் கண்டார்.

மேலும், அவர் மறைவான செய்திகளை கூறுவதில் உலோபித்தனம் செய்பவரல்லர்.

அன்றியும், இது விரட்டப்பட்ட ஷைத்தானின் வாக்கல்ல.

எனவே, (நேர்வழியை விட்டும்) நீங்கள் எங்கே செல்கின்றீர்கள்?

இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்.

உங்களில் நின்றும் யார் நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்).

ஆயினும், அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் (நல்லுபதேசம் பெற) நாடமாட்டீர்கள்.

- அல் - குர்ஆன் / ஸூரத்துத் தக்வீர் / 81 : 01 - 29
 --Musthafa Bin Shahul
_ INDIA

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP