Thursday, September 15, 2011

நீங்கள் மத்ஹபு வாதிகளா ? இது உங்களுக்கான பதிவே !.

ஆக்கம் சகோ - அபூ யஹ்யா


மத்ஹபுகள் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும்?

இன்று தோன்றியுள்ள மார்க்கப் பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணமே மத்ஹபுச் சட்டங்கள்தான். குர்ஆன், ஹதீஸிற்கு மாற்றமான சட்டங்களைப் போதிக்கும் மத்ஹபுகள் எமது நாட்டில் மாத்திரமல்லாது உலக நாடுகளிலும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன. இந்த மத்ஹபு மாயையில் சிக்கியுள்ள அப்பாவி முஸ்லிம்கள் அதன் விபரீதம் புரியாமல் தமது வணக்க வழிபாடுகளில் மத்ஹபுச் சட்டங்களையே பெரும்பாலும் பின்பற்றுகின்றனர்.
இம் மத்ஹபுகளே அநேக அரபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் சேர்த்து போதிக்கப்படுகின்றது. அனைத்து வழிகெட்ட கொள்கைகளும், அனாச்சாரங்களும், பித்அத்துக்களும் தோன்ற அடிப்படைக் காரனமாக அமைகின்றது. இம் மத்ஹபுகள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்து ஓரங்கட்டப்பட வேண்டும். அதற்கு நாம் இரண்டு விடயங்களை கவனத்திற் கொள்ளவேண்டும்.
1. குர்ஆன், ஹதீஸ் ஆகியவைகளின் சட்டங்கள் தெளிவாக மக்கள் மன்றத்தில் முன்வைக்கப்படல்.

2. மத்ஹபுகளிலுள்ள குர்ஆன், ஸுன்னாவை அவமதிக்கும் சட்டங்கள், புத்திக்குப் பொருந்தாத ஆபாசத்தை அள்ளியிறைக்கும் விளக்கங்கள், மத்ஹபை பின்பற்றுபவர்களே பின்பற்றாத மத்ஹபிலுள்ள சட்டங்கள் போன்றவைகளை மக்கள் முன் சமர்ப்பித்தல்.
இவ்விரண்டு விடயங்களும் மக்களுக்கு தெளிவாக போதிக்கப்பட்டால் அப்பாவி மக்கள் தங்களைத் திருத்திக் கொண்டு தூய இஸ்லாத்தை விளங்கி தமது மறுமை வாழ்வுக்கு உதவக்கூடிய வணக்க வழிபாடுகள் எது என்பதை இனங்கண்டு கொள்வார்கள்.
அன்பார்ந்த இஸ்லாமிய சகோதர சகோதரிகளே! நாம் கூறும் விடயங்களை தெளிவாக சிந்தித்து செயற்பட இறைவன் துணை புரிவானாக!
‘எமது கடமை தெளிவாகச் சொல்வதேயன்றி வேறில்லை.’ (அல்குர்ஆன் 36:17)
‘மத்ஹபு’ என்பதன் பொருள்
மத்ஹபு என்ற சொல்லுக்கு வழிமுறை, போக்கு, கருத்து என்று பொருள்படும். மக்கள் அன்றைய காலகட்டங்களில் தங்களிடம் இருந்த இமாம்களிடம் சந்தேகங்களைக் கேட்பர். அந்த சந்தேகம் பற்றி பின்பு அவர்கள் உரையாடும்போது இது ஷாபியி இமாம் மத்ஹபு(ஷாபியின் கருத்து) இது மாலிகி மத்ஹபு(மாலிகின் கருத்து) இப்படிப் பேசிக்கொள்வர். இவர்கள் இவ்வாறு பேசும்போது பயன்படுத்திய வார்த்தை நிலைத்து இறுதியில் ‘மத்ஹபு’ என்பது இஸ்லாத்தில் உள்ள பிரிவுகளுக்கு பயன்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது.
சொல் ரீதியாக ஆராயும்போது ‘தஹப’ என்ற பதத்திலிருந்து பிறந்த ஒரு சொல்தான் மத்ஹபு என்ற சொல்லாகும். ”தஹப’ என்றால் போனான் என்பது பொருள். ‘மத்ஹபு’ என்றால் போகுமிடம் என்று பொருள்படும். எனவேதான் ஒரு ஹதீஸில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.
‘நபியவர்கள் மத்ஹபுக்குப் போக நாடினால் தூரமாகுவார்கள்.’ (ஆதாரம்: அபூதாவுத்-01)
இவ்விடத்தில் ‘மத்ஹபு’ என்ற சொல் ‘கழிவறை’ எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பதை அறியலாம். இஸ்லாத்தில் நான்கு மத்ஹபுகள் மட்டுமே உள்ளன. அவை ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹன்பலி என முஸ்லிகள் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒரு எண்ணமாகும். இஸ்லாத்தில் பல மத்ஹபுகள் உண்டாயின. அவைகளில் முக்கியமான வைகளாக பின்வருபவற்றை குறிப்பிடலாம்.
1. சைதி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவரின் பெயர் ‘சைத் பின் அலி’ என்பதாகும். இவர் ஹுசைன்(ரழி) அவர்களின் வழித்தோன்றலாவார். நபியவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் என கூறப்படுகினறது. கி.பி.700க்குப் பின் மதீனாவில் பிறந்து 740ல் மரணமடைந்தார். இவர் இமாம் அபூஹனிபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எமன் நாட்டில் இம் மத்ஹபு இன்றும் கூட பின்பற்றப்படுகிறது.

2. அவ்சாயி மத்ஹபு
இம்மத்ஹபின் தலைவரின் பெயர் அப்துர் ரஹ்மான் பின் அல் அவ்சாயி என்பதாகும். இவர் கி.பி.708ல் பிறந்து 774ல் மரணமடைந்தார். இவர் சிரியா நாட்டைச் சேர்ந்தவர். இவரும் இமாம் அபூஹனீபா காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3. ழாஹிரி மத்ஹபு
இம் மத்ஹபின் ஸ்தாபகர் பெயர் தாவுத் இப்னு அலி என்பதாகும். இவர் கி.பி.715ல் கூபாவில் பிறந்து 883ல் மரணமடைந்தார். ஸ்பெயின் போன்ற நாடுகளில் இம் மத்ஹபு காணப்படுகிறது. இவர் இமாம் ஹன்பலியின் காலத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஓர் அம்சமாகும்.

4. லைதி மத்ஹபு
இதைத் தோற்றுவித்தவர் லைத் என்பவர் என்று கூறப்படுகின்றது. இவர் எகிப்தில் கி.பி. 716ல் பிறந்து 791ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

5. தவ்ரி மத்ஹபு
இம் மத்ஹபுக்குச் சொந்தக்காரரின் பெயர் சுப்யானுத் தவ்ரி என்பதாகும். இவர் கி.பி. 719ல் கூபாவில் பிறந்து 777ல் மரணமடைந்தார். இவரும் இமாம் அபூஹனீபாவின் காலத்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

6. ஜரீரி மத்ஹபு
இம் மத்ஹபின் தலைவர் முஹம்மது இப்னு ஜரீர் இப்னு யஸீத், என்பவராவார். கி.பி.839ல் பிறந்து 929ல் மரணமடைந்தார்.

ஆகவே மத்ஹபுகள் என்பது நான்கோடு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல.
இன்னும் பல உண்டு என்பதை அறியலாம். ‘மத்ஹபு’ என்பது அந்தந்த இமாம்களின் கருத்தை அடிப்படையாக்க கொண்டு இருந்ததே தவிர அழ்ழாஹ்வாலும் அவனுடைய தூதராலும் உருவாக்கப்பட்டதல்ல என்பதையும் விளங்கிக் கொள்ளலாம். மேற்கூறப்பட்ட மத்ஹபுகள் மறைந்தமைக் கான காரணங்களாக பின்வருவனவற்றைக் கூறலாம்.
1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.

2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் போனமை.

3. இம்மத்ஹபுகளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் கூடுதல் கவனம் செலுத்தாமை.

நான்கு மத்ஹபுகளான ஹனபி, ஷாபியி, மாலிகி, ஹம்பலி ஆகியவைகள் இன்றுவரை நிலைத்தமைக்கான காரணங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. இந்நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றுவோர் அதிகமாக இருந்தமை.

2. ஆட்சியாளர்கள் இம்மத்ஹபுகளுக்கு ஆதரவாக இருந்தமை.

இதனால்தான் இவைகள் நிலைத்ததேயன்றி இறைவனின் அங்கீகாரத்தால் அல்ல. இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும்.



ஹனபி மத்ஹபு

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் முஸ்லிம்களில் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். ஏறத்தாள 75% சதவீத அரபி மதரஸாக்களும், பள்ளிவாசல்களும், பெரும் நகரங்களிலுள்ள டவுன் காஜிகளூம் ஹனபி மத்ஹபை சேர்ந்தவர்களாவே இருக்கின்றனர். 
அண்மைக் காலமாக தமிழகத்தில் உருவாகி வேகமாக வளர்ந்து வரும் குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் மக்கள் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளதால், அது இவர்களை மிகவும் பாதித்துள்ளதை நிதர்சனமாகக் கண்டு வருகிறோம். 
 
   தாங்கள் வாழையடி வாழையாக பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் சட்டங்களுக்கு மாறாக குர்ஆன், ஹதீஸ்களின் சட்டங்கள் வெகுவாக பரவி வருவது இவர்களை பெரிதும் பாதித்துள்ளது. இதனால் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் செயல்பட நினைக்கும் மக்களை பல விதங்களில் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். இதில் அரபி படித்த மவ்லவிகள் பெரும் பங்கேற்று செயலாற்றி வருகின்றனர்.

    இவர்கள் நாம் எடுத்து வைக்கும் ஆதாரங்களை நியாயமான முறையில் விமர்சித்தால் நாமும் அதனை ஏற்கலாம். ஆனால் நமது குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை புறக்கணித்து விட்டு தாங்கள் பின்பற்றி வரும் ஹனபி மத்ஹபின் ஒரு சில பிக்ஹு நூல்களின் ஆதாரங்களை எடுத்து வைக்கின்றனர். அந்நூல்கள் யாவை? எப்போது தொகுக்கப்பட்டவை என்பதை இங்கு பார்ப்போம். இதம் மூலம் அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரத்தின் உண்மை நிலையை விளங்க முடியும்.

    ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் உண்மைப் பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்) ஆகும். அவர்கள் ஹிஜ்ரி 80ல் கூஃபாவில் பிறந்து பெரும் செல்வந்தராக ஜவுளி வியாபாரம் செய்து வந்தார்கள். ஹிஜ்ரி 150ல் மரணமெய்தினார்கள். திருகுர்ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்தார்கள். பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் தலைநகராக விளங்கிய கூஃபாவில் வாழ்ந்ததால் ஹதீஸ்களை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கடினமாகவும், கவனமாகவும் இருந்துள்ளார்கள். “உண்மையான ஹதீஸ்கள் கிடைக்குமானால் அதுவே என் வழி” எனவும் கூறிச் சென்றுள்ளார்கள். இமாமுல் அஃலம் (தலை சிறந்த இமாம்) என அனைவராலும் அன்று முதல் இன்று வரை அழைக்கப்படுகிறார்கள்.

    அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைத்துச் சென்றுள்ளதற்கு அறவே ஆதாரங்களில்லை. இமாம் மாலிக்(ரஹ்) அவர்களுக்கு முஅத்தா மாலிகி என்ற ஹதீஸ் நூலும், இமாம் ஷாபிஈ(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் ஷாபிஈ, உம்மு போன்ற நூல்களும், இமாம் ஹம்பலி(ரஹ்) அவர்களுக்கு முஸ்னத் அஹ்மத் போன்ற நூல்களும் அந்தந்த இமாம்களால் தொகுக்கப்பட்டவை இன்று வரை இருப்பதை நாம் காணலாம். ஆனால் இவர்கள் அனைவருக்கும் முந்தியவராக இமாமுல் அஃலம் என அனைவராலும் போற்றப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் ஏன் ஒரு நூலைக்கூட எழுதவில்லை? நபி(ஸல்) அவர்களின் மறைவிற்குப்பின் முதல் நூற்றாண்டிலேயே பிறந்த அபூஹனீபா(ரஹ்) இஸ்லாத்தின் அடிப்படையான திருக்குர்ஆனும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலுள்ள ஹதீஸ்களும் போதுமென்ற நினைவில் எந்த நூலையும் எழுதவில்லையென நான் நல்லெண்ணம் கொள்கிறோம்.

    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிக்குற்குப்பின் அவரது மாணவர் முகம்மது(ரஹ்) அவர்கள் இமாம் மாலிக்(ரஹ்) அவர்களைப் பின்பற்றி “முஅத்தா முஹம்மது” என ஒரு ஹதீஸ் நூலை எழுதியிருப்பது யாவரும் நன்கரிவர். அது இன்றும் மக்களிடையே உள்ளது. இவ்விதமாக எந்நூலையும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் எழுதாமலிருக்க, பின்வந்தவர்கள் மார்க்கத்தில் இல்லாததையும் பொல்லாததையும் எழுதி தங்களது பெயரில் வெளியிட்டால் மக்களிடையே எடுபடாது என எண்ணி அனைவராலும் “இமாமுல் அஃலம்” எனப்புகழப்படும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களிம் பெயரில் ஹனபி சட்டங்களாக அறங்கேற்றினர். இவர்கள் கூறும் கூற்றுகளை அபூஹனீபா(ரஹ்) அவர்களின் கூற்றாக மக்களிடையே பிரபல்யபடுத்தியுள்ளனர்.

    ஹனபி மத்ஹபின் முக்கிய பிக்ஹு நூல்களாக இன்று மக்களைடையே உலவி வரும் நூல்களையும், அவை தொகுக்கப்பட்ட காலங்களையும் கீழ்காணும் அட்டவணையிலிருந்து பார்த்து இது இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களால் கூறப்பட்டிருக்க முடியுமா? என்பதை வாசகர்களும், தங்களை ஹனபிகள் எனக்கூறிக் கொள்வோரும் கவனிக்க வேண்டுகிறோம்.

    இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் காலம் = ஹிஜ்ரி 80 முதல் 180 வரை
    ஹனபி மத்ஹபின் பிரபல்யமான பிக்ஹு நூல்களாக இன்று நடைமுறையிலுள்ளவைகளும் அவை தொகுக்கப்பட்ட காலமும்.




  நூல்கள் ஹிஜ்ரிநூற்றாண்டு இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு சுமார்
  1.குத்ரி 5ம் நூற்றாண்டு 300 வருடங்களுக்குப் பின்
  2.ஹிதாயா 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  3.காஜிகான் 6ம் நூற்றாண்டு 400 வருடங்களுக்குப் பின்
  4.கன்னியா 7ம் நூற்றாண்டு 500 வருடங்களுக்குப் பின்
  5.தஹாவி 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  6.ஷரஹ் விகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  7.நிகாயா 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  8.கன்ஜ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  9.ஜாமிஉல்ருமூஸ் 8ம் நூற்றாண்டு 600 வருடங்களுக்குப் பின்
  10.ஃபதாவே பஜாஸியா 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  11.பதாஉல் கதீர் 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  12.குலாஸத் கைதானி 9ம் நூற்றாண்டு 700 வருடங்களுக்குப் பின்
  13.சல்பீ 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  14.பஹ்ரு ராயின் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  15.தன்வீர் அப்ஸார் 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  16.தகீரா 10ம் நூற்றாண்டு 800 வருடங்களுக்குப் பின்
  17.துர்ருல் முக்தார் 11ம் நூற்றாண்டு 900 வருடங்களுக்குப் பின்
  18.ஃபதாவா ஆலம்கீரி 12ம் நூற்றாண்டு 1000 வருடங்களுக்குப் பின்





இமாம் அபூஹனீபா(ரஹ்) பெயரில் ஹனபி மத்ஹபின் பிக்ஹூ நூல்களான இவையனைத்தும் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மரணத்திற்கு 300 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டுள்ளன. இவற்றை தொகுத்தவர்கள் எவருமே அபூஹனீபா அவர்களிடமிருந்து எப்படிப் பெற்றார்கள் என்ற விபரத்தையோ, அறிவிப்பாளர் வரிசைகளையோ குறிப்பிடவேயில்லை. ஆனால் பின்னால் வந்தவர்கள் முந்திய நூல்களை ஆதாரமாகக் காட்டியுள்ளனர், அவற்றிலும் விபரங்களில்லை. இதனைத் தொகுத்தவர்கள் அரபு குலத்தவரோ, மொழியினரோ மட்டுமல்ல. அரபியை கற்றறிந்த மாற்று நாட்டவராலும், குலத்தவராலும், இனத்தவராலும், மொழியினராலும் இவை தொகுக்கப்பட்டுள்ளன. கடைசியாகக் குறிப்பிட்டுள்ள “ஃபதாவா ஆலம்கீரி” மொகலாய பேரரசரான ஒளரங்கசீப் காலத்தில் தொகுக்கப்பட்டதாகவும், அத்தொகுப்புக்கு காயல் சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களும் உதவியதாகவும் ஒரு செய்தியுள்ளது நினைவு கூறத்தக்கதாகும்.


    இந்நூல்களைத் தொகுத்தவர்கள் அறவே திருக்குர்ஆன், உண்மையான நபிமொழிகளை ஆதாரமாக கொடுக்கவில்லையெனக் கூறிவிட முடியாது. அப்படி எழுதியிருப்பார்களேயானால் இந்நூல்கள் இவ்வளவு பிரபல்யமாகியிருக்க முடியாது. எனவே ஆங்காங்கு ஒரு சில குர்ஆன் வசங்களையும் நபி மொழிகளையும், செருகி அதனை தங்களது மத்ஹபு கொள்கைக்கொப்ப வளைத்தும், திரித்தும் “ஃபத்வா” (மார்க்கத்தீர்ப்பு) வழங்கியிருப்பதை காணலாம். ஒரு சில இடங்களில் குர்ஆன் ஹதீஸ்களின் அடிப்படையில் சரியான மார்க்க தீர்ப்பை வழங்கி விட்டு தொடர்ந்து அதற்கு மாற்றமான தீர்ப்பையும் முஸ்தஹபு, முபாஹ் லாபஃஸ் என்ற அரபிச் சொல்லையும் கொண்டு குழப்பியிருப்பதையும் காணலாம்.


    இமான் மாலிக்(ரஹ்) அவர்கள் எழுதிய “முஅத்தா மாலிகி” நூலுக்கு விளக்கம் தந்து “அவ்ஜஜுல் மஸாலிக்” என்ற நூலை ஹனபி மத்ஹபினராக முகம்மது ஜக்கரிய்யா சாகிப் அவர்கள் சென்ற நூற்றாண்டில் எழுதினார்கள். மாலிக் மத்ஹபின் பல சட்டங்கள் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் ஹனபியின் நடைமுறை சட்டங்களுக்கு மாற்றமாக இருப்பதை கண்டார்கள். எப்படி தனது மத்ஹபை விட்டுக் கொடுக்க முடியும்! எனவே முஅத்தா மாலிகி நூலை எழுதிய மாலிகி(ரஹ்) அவர்களையே முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் ஹனபியாக மாற்றி விளக்கம் தந்தார்கள். இதனை இன்றும் ஹதீஸ் கலா வல்லுனர்கள் முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் “முஹன்னஃபுல் மாலிகி” மாலிக்(ரஹ்) அவர்களை ஹனபியாக்கி விட்டார் எனக் கூறி வருவதை ஹதீஸ் கலையில் காணலாம். இந்த அளவு தங்களது மத்ஹபின் மீது அளவற்ற பற்று வைத்து தனியா வெறியுடன் இருப்பது வருந்ததக்க விஷயமாகும்.


    எந்த அரபி மதரஸாவிற்காவது ஹனபி மார்க்கத் தீர்ப்பு கேட்டு எவராவது இன்று ஒரு வினா எழுதி அனுப்பினால் அவர்கள் பெரும்பாலும் நாம் குறிப்பிட்டுள்ள கடைசி இரு (துர்ருல் முக்தார், ஃபதாவா ஆலம்கீரி) நூல்களிலிருந்து ஆதாரம் தருவதைக் காணலாம். அதாவது இஸ்லாத்தின் அடிப்படைகளான குர்ஆன் உண்மையான நபிமொழிகளின் ஆதாரங்களில் ஃபத்வா தீர்ப்பு தரமாட்டார்கள். தங்களிடமுள்ள ரெடிமேட் பிக்ஹு நூல்களிலிருந்து எடுத்துரைப்பார்கள். அதாவது அபூஹனீபா(ரஹ்) அவர்களின் மறைவிற்கு 1000 வருடங்களுக்குப்பின் தொகுக்கப்பட்டதிலிருந்து மார்க்கத் தீர்ப்பு வழங்குவார்கள். அத்தீர்ப்பை அவர்கள் எப்படி எடுத்தார்கள் என்ற விபரம் இருக்காது. அந்நூல்கள்தான் தங்களது சட்ட நூல்கள் என்ற பாணியில் சட்டம் தருவார்கள்.

    அல்லாஹ்வின் பேரருளால் இன்று மக்களிடையே இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன், ஹதீஸ்களின் பக்கம் நாட்டம் உருவாகியுள்ளது. பெரும்பான்மையினர் ஆதாரம் கேட்கத் துவங்கிவிட்டார்கள். இதனை ஒரு சில மெளலவிகளும் உணரத் தொடங்கி குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் பேசவும் செயலாற்றவும் ஆரம்பித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.



நான்கு வழிகள்-நான்கு ஆறுகள்

இஸ்லாம் கற்றுத்தராத நான்கு வழிகள் இமாம்கள் பெயரில் நடைமுறைப் படுத்தப்படுகின்றது. அவை ஹனபி, ஷாபி, மாலிகி, ஹம்பலி எனத் தெரிந்த ஒன்றுதான். இந்த நான்கு வழிகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதுதான் சுன்னத் வல் ஜமாஅத்தின்  கொள்கையாம். உலகத்தில் எந்த தத்துவமாக இருந்தாலும் ஒரு வழிமுறையைத்தான் அவர்கள் கொள்கையாகக் கூறுவார்கள். ஆனால் மத்ஹப்வாதிகளிடம் நான்கு வழிமுறைகள்.
 
    ஒவ்வொரு மத்ஹப்வாதிகளும் தங்கள் மத்ஹபை உயர்த்திப் பேசுவதும் மற்றதை தாழ்த்துவதும் வாடிக்கை. ஹனபி பிக்ஹூ நூலில் ” இந்த அடியானின் மீது அல்லாஹுத்தஆலா ஷரியத்தைப்பற்றி மெய்ஞான ரகசிய ஒழியை பாய்ச்சியபோது அந்த வெளிச்சத்தில் அனைத்து மத்ஹபுகளையும் குறிப்பாக நான்கு மத்ஹபுகளையும் நன்கு நோட்டமிட்டேன். அவை ஒவ்வொன்றும் ஆறுகள் வடிவத்தில் ஓடிக்கொண்டிருந்தன.
    அந்த நதிகளில் அதிகப் பெரியதாகவும் அதிக நீளம் உடையதாகவும் ஹனபி மத்ஹபைக் கண்டேன். அதாவது எல்லா மத்ஹபுகளிலும் பெரிய மத்ஹபும், நீண்ட காலம் நிலைத்திருப்பதும் ஹனபீ மத்ஹப் ஒன்றுதான் என்பது எனக்குப் புலனாகிறது.”
    இவ்வாறு மெய்ஞான ஒழியில் ஹனபீ ஆறு ஓடுவதைப் பார்த்ததாகப் பகல் கணவு கண்டவர் அல்லாமா ஷாஃரானீ அவர்கள் தமது நூலான ‘மீ ஜானுல் இஃதிதாலில்’ சிறப்பித்து கூறுகிறார். மேலும் இதே நூலில் நபித்துவத்தின் பரிபூரண சுடர்கள் ஹனபீ மத்ஹப்புடன் இணைந்து நிற்கின்றன என்பதும் அவருக்குப் புலனாகின்றதாகப் புலம்புகிறார்.
    ஈஸா(அலை) அவர்களும் ஹனபி மத்ஹப்தான்
    இவர்களின் ஹனபீ மத்ஹபு வெறி எந்த அளவிற்கு உச்சத்தில் இருக்கிறதென்றால்  நபிமார்களுக்கும் ஹனபீ லேபிள் ஒட்டும் அளவிற்கு முற்றி உள்ளது. அதாவது கற்பனையாக ஒரு நபி இந்த சந்தர்ப்பத்தில் அனுப்பபடுகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், அப்போது அவர் ஹனபீ மத்ஹபு பிரகாரமே செயல்படுவார். நூல்: ஃபுஸிலே ஸித்தா.
    ஹழரத் ஈஸா(அலை) அவர்கள் மீண்டும் இறங்கிய பின்னர் ஹனபீ மத்ஹப்பிற்காகவே செயல்படுவார் என்று இமாமே ரப்பானீ முஜத்திதே அல்ஃபதானி அவர்கள் போற்றி புகழ்ந்து கூறுகிறார்களாம். இப்லீஸ் அல்லாஹ்விற்கே பாடம் போதித்தது போல் இப்லீஸ் ஏஜண்டுகளும் அல்லாஹ்விடமிருந்து ஷரியத் சட்டத்தை வாங்கி வந்த நபிமார்களுக்கே மத்ஹப் சட்டத்தை போதிக்க துணிந்து விட்டார்கள்.
    தமது  மத்ஹப்தான் சரியானது  மற்றவர்களின் மத்ஹப்  தவறானது  என்று  கூறுகிறது (ஹிஜ்ரி 1004 ல் எழுதப்பட்ட துர்ருல்முக்தார் பாகம்1 பக்கம்18) ஹனபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஷஃபியாக மாறிவிட்டால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் (துர்ருல் முக்தார் பாகம்2 பக்கம்443) மத்ஹபுகளை பின்பற்றுவதுதான் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை வழியாம். அந்த நான்கில் ஒன்றை பின்பற்றுவதுதான் சரியான வழியாம் என்ன குழப்பமான கொள்கை! மத்ஹப்வாதிகளின் கொள்கைப்படி இஸ்லாத்திற்கு ஒரே வேதம்; ஆதம், ஹவ்வா என்ற ஒரு ஜோடியில் இருந்து பெருகிய மனித குலம். மனித குலத்திற்கு ஒரே இறுதித்தூதர். ஆனால் மத்ஹப் சட்டங்கள்  மட்டும் நான்கு. இந்த குழப்ப தத்துவத்தையே ஆலிம்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்.
    இந்த மத்ஹப் சட்டங்கள் இஸ்லாத்திற்கு முரணானவை என்பதை விளக்க ஒரு சிறிய உதாரனத்தை பார்ப்போம். அல்லாஹ் கூறுகிறான் ”கடலில் வேட்டையாடுவதும், புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக ஆக்கப்பட்டுள்ளது (5:96)ஆனால் “பிக்ஹின் கலைக்களஞ்சியம்”  என்ற “ஹனபி மத்ஹப்பின் சட்ட விளக்கக் கடல்” என்ற  நூலில் நண்டு,  இரால் ஆகியவை ஹராம்” எனக் கூறப்பட்டுள்ளது.
    அல்லாஹ் படைத்த கடலில் வேட்டையாடும் மீன்கள் எல்லாம் ஹலால் ஆனால் ஹனபீ சட்ட விளக்கக் கடலில் உள்ள நண்டு இரால் போன்றவை ஹராமானது எப்படி? வேதமும் இறுதி வேதம், இறுதித் தூதர் வஹீ முற்று பெற்றபின் முகவரியற்ற பொய்ச் செய்தியைத் தருவது யார்?
    எவர்கள் மீது ஷைத்தான்கள் இறங்குகிறார்கள் என்பதை நான் உமக்கு அறிவிக்கட்டுமா? பெரும் பொய்யனான ஒவ்வொரு பாவியின் மீதும் அவர்கள் இறங்குகிறார்கள். தாங்கள் கேள்விப்பட்டதையெல்லாம்  (ஷைத்தான்கள் அவர்களின் காதுகளில்) போடுகிறார்கள்; இன்னும் அவர்களில் பெரும்பாலோர் பொய்யர்களே. (26:221,223).
    நீ எனக்கு கியாமல் நாள்வரை அவகாசம் கொடுத்தால், நான் இவருடைய சந்ததிகளில் சிலரைத்தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் என்று (இப்லீஸ்) கூறினான். (17:62).
    அல்லாஹ்விடமிருந்து அவகாசம் பெற்று முதல் மனிதரில் ஆரம்பித்து இன்று முதல் இறுதிவரை மனிதர்களை வழி கெடுத்துக் கொண்டிருப்பான். இந்த வலையில் மாட்டிய ஆலிம்கள் எழுதிய நூல்களில் எல்லாம் குர்ஆன் ஹதீஸிற்கு முரணானச் செய்திகளை அதிகம் காணலாம்.
     ஷைத்தான் முஸ்லிம்களை ஏகத்துவப் பாதையில் செல்ல விடாமல் தனது ஏஜண்டுகள் மூலம் முன்னால் வந்து ஹனபீ மத்ஹபைப் பின்பற்றச் சொல்கிறான். பின்னால் வந்து ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றுவது தான் சரியானது என்கிறான். வலது பக்கம் மாலிக் மத்ஹப் மகத்தானது என்கிறான். இடது புறம் சென்று  ஹம்பலி மத்ஹபே கண்ணியமானது என்று கூறி முஸ்லிம்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறான். ஆகவே முஸ்லிம்களே! சிந்தியுங்கள். உங்களுக்கு நேர்வழியில்  செல்ல அல்லாஹ்  இறக்கிய சட்டம்  வேண்டுமா? வேண்டாமா? தேர்ந்தெடுங்கள் உங்கள் இறுதி முடிவை.



கண்ணியமிக்க இமாம்களும் தொடர்பற்ற மத்ஹபுகளும்

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை(நபியை)நாம் அனுப்பும் போதெல்லாம் ‘எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம்.நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவர்கள்’என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை.(அல்குர்ஆன்:43:23)
இன்று உலகில் வாழம் முஸ்லிம்களில் கணிசமானோர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றுகின்றனர. இம்மத்ஹபுகளைத் தொகுத்தவர்கள் கண்ணியமிக்க இமாம்களான அபு ஹனிபா,ஷாபிஈ, மாலிகி, ஹம்பலி, ஆகியோர்கள்தான் என்றும் நம்புகின்றனர்.
இந் நம்பிக்கை முற்றிலும் தவறானதாகும். எவ்வாறு இஸ்லாத்திற்கும் மத்ஹபுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையோ, அதே போன்று மத்ஹபுகளுக்கும் நான்கு இமாம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. இமாம்கள் மத்ஹபுகளைத் தொகுக்கவுமில்லை, தங்களை பின்பற்றுங்கள் என்று சொல்லவுமில்லை.. இவ்விமாம்கள் மீது கொண்ட அளவுகடந்த பக்தியினால் இவர்களின் மாணவர்களால் உருவாக்கப்பட்டவைகளே மத்ஹபுகள்.

இவர்கள் மரணித்து பலநுறு ஆண்டுகளுக்குப் பின்னால் எழுதப்பட்டவைகளே இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு  வழங்கக்கூடிய (பத்வா) நூல்களாக உள்ளன.

1.நூல்  அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்
ஆசிரியர்  அபு ஸகரிய்யா முஹியித்திpன் இப்னு ஷரப் அன்  நவவி
பிறந்த வருடம் ஹிஜ்ரி  631 இறந்த வருடம் ஹிஜ்ரி 676
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்


2.நூல்  பத்ஹுல் முயுன்
ஆசிரியர்    ஸைனுத்திpன் இப்னு அப்துல் அஸிpஸ் அல்மலேபாரி
பிறந்த வருடம்
இறந்த வருடம்
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நுpல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்

3.நூல்  இஆனதுத் தாலிபின்
ஆசிரியர்    முஹம்மத் ஷதா அத்திம்யாதி
பிறந்த வருடம் ஹிஜ்ரி 1266
இறந்த வருடம் ஹிஜ்ரி 1302
இமாம் ஷாபிஈ அவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்
ஷாபிஈ (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஷாபிஈ மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை.
இமாம் ஷாபிஈ (ரஹ்)அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.

அதே போன்று இமாம் அபு ஹனிபா மரணித்து பலநூறு ஆண்டுகளுக்கு பின்னால் எழுதப்பட்டவைகளே ஹனபி மத்ஹபில் மார்க்கத்திpர்ப்பு  வழங்கக்கூடிய (பத்வா)நூள்களான.

>>நூல்     துர்ருல் முக்தார்
ஆசிரியர் பெயர்     முஹம்மது அலாவுதீன் ஹஸ்காபி
பிறந்த வருடம்     ஹிஜ்ரி 1025
இறந்த வருடம்     ஹிஜ்ரி 1088
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும்இடைப்பட்ட காலம் 900 ஆண்டுகள்.


>>நூல்     பதாவா ஆலம்கீரி
ஆசிரியரின் பெயர்     முகலாய மன்னர் அவ்ரங்கசீப் காலத்து உலமாக்கள்.
எழுதப்பட்ட காலம்     ஹிஜ்ரி 1118
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 975 ஆண்டுகள்.


>> நூல்     கன்ஜுத் தகாயிக்
ஆசிரியரின் பெயர்     அபுல் பரக்கத் அன்னாசாபி
இறந்த வருடம்     ஹிஜ்ரி 710
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 560 ஆண்டுகள்
.

>>  நூல்     ஹிதாயா
ஆசிரியரின் பெயர்     அலி பின் அபீபக்கர்
பிறந்த வருடம்     ஹிஜ்ரி 511
இறந்த வருடம்     ஹிஜ்ரி 593
இமாம் அபூஹனீபாவிற்கும்இ இந்நூலின் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 400 ஆண்டுகள்.

அபூஹனீபா (ரஹ்) அவர்களுடைய பெயரால் ‘ஹனஃபி மத்ஹப் நூல்கள்’ என அழைக்கப்படும் இந்நூல்களுக்கும் இமாம் அவர்களுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி இமாம் அவர்கள் கூறிய மார்க்கத்தீர்ப்புகள் என அழைக்கப்படும் இந்நூல்கள் யாவும் இமாம் அவர்களுக்குப் பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்தவர்களால் எழுதப்பட்டது என்பது மேலே கூறப்பட்ட சான்றுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம்.
மேலும். நான்கு இமாம்களும் தங்களைப் பின்பற்றுமாறு ஒருபோதும் கூறவுமில்லை மாறாக


1.இமாம் ஷாபிஈ(ரஹ்) கூறுகிறார்கள்
எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால் ரசூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.


ஆதாரம் : தாரீகு திமிஷ்க் (இப்னு அஸாகிர்) பாகம் 3 இ பக்கம் 15
ஈகாழுல் ஹிமம் பக்கம் 100

‘ரசூல்(ஸல்) அவர்களின் வழிமுறை எவருக்குத் தெரிகின்றதோ அதை எவருடைய கருத்துக்காகவும் விடுவது ஹலால் இல்லை’ என்று முஸ்லிம்கள் அனைவரும் ‘இஜ்மாவு’ செய்துள்ளனர்.
ஆதாரம் : ஈகாழுல் ஹிமம் பக்கம் 68
.

2. இமாம் அபூஹனீபா(ரஹ்) கூறுகிறார்கள்
ஹதீஸ் சஹீஹாக (ஆதாரப் பூர்வமாக) கிடைக்கும் போது அதைப் பின்பற்றுவதே உனது கொள்கையாகும்.
ஆதாரம் :- ஹாஷியா இப்னு ஆபிதீன். பாகம் 1இ பக்கம் 63
ரஸ்முல் முப்தீ பாகம் 1இ பக்கம் 4
ஈகாழுல் ஹிமம் பக்கம் 62

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம்’ என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை.
ஆதாரம் :- அல்இன்திகா பக்கம் 145

3. இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :-
நான் (சில ேநரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான் எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் ெபாருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும் நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்!
ஆதாரம் :- ஜாமிவு இப்னு அப்துல்பர் பாகம் 2இ பக்கம் 42.
உஸுலுல் அஹ்காம்இ பாகம் 6இ பக்கம் 149
ஈகாழுல் ஹிமம் இ பக்கம் 72.

நபி(ஸல்) அவர்களின் சொல்லைத் தவிர வேறு எவரது சொற்களிலும் எடுக்கத் தக்கவைகளும் உண்டு நபி(ஸல்) அவர்கள் சொல் மட்டுமே முற்றாக எடுக்கப்பட வேண்டியவை.
ஆதாரம் : இர்ஷாதுஸ்ஸாலிக் பாகம் 1 பக்கம் 227
ஜாமிவு இப்னு அப்துல் பர் பாகம் 2 பக்கம் 91.

4. இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்(ரஹ்) கூறுகிறார்கள்.
என்னையோ மாலிக் ஷாபீஈ அவ்ஸாயீ ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன் ஹதீஸிலிருந்து) நீயும் புரிந்து கொள்!
ஆதாரம் : ஈகாழுல் ஹிமாம்இ பக்கம் 113.

ஷாபி, ஹனபி மத்ஹப்களின் சட்டவிளக்க ஞானக் கடல்கள் என மத்ரஸாக்களில் வைத்து மாணவர்களுக்குப் போதிக்கப்படும் மேற்கூறப்பட்ட நுpற்களில் குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்துக்கள் நிறையவே இருக்கின்றன. அல்லாஹ்வின் தெளிவான வசனங்களையும் நபி (ஸல்) அவர்களின் அழகிய முன்மாதிரிகளையும் விட்டுவிட்டு மனிதர்கள் தம் கரங்களால் எழுதியவைகளை மார்க்கத் தீர்ப்புகள் என நம்பி செயல்படுபவர்கள் அல்லாஹ்வின் எச்சரிக்கைகளைப் பற்றி சிந்திக்க கடைமைப் பட்டுள்ளார்கள்

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP