Monday, February 21, 2011

சமூக வலைதளத்தின் ( Face Book & Twitter ) முக்கியத்துவம்

மான்ட்ரியல்: எகிப்து, துனீசியா, ஆகிய நாடுகளில் ஏற்பட்ட அரசுக்கெதிரான மக்கள் புரட்சியால் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு எந்த ஒரு த‌லைமையே, தலைவரோ வழிநடத்தப்படாமல் சமூக வலைதளமான டிவீட்டர், பேஸ்‌புக் போன்றவற்றில் எழுந்த ‌மக்கள் கருத்தினால் மாற்றம் ஏற்பட்டது.இதன் எதிரொலியாக மியானமர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித்தலைவரான ஆங்சான்சூகி டிவீட்டர், பேஸ்புக் வலை‌தளங்களில் உறுப்பினராக விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இது குறித்து ஆங்சான்சூகி கனடாவிலிருந்துவெளிவரும் குளோபல்மெயில் எனும் பத்தரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: எகிப்திலும், (முபராக்) துனீசியாவிலும் (பென்அலி) நீண்டகால அதிபர்களாக நாட்டை ஆட்சி செய்த வர்களை எதிர்க்க எந்த இயக்க‌மோ, தலைமைய‌ோ இல்லலை.சமூக வலைதளங்களான டிவீட்டர், பேஸ்புக் ஆகியவை தான் இவர்களை பதவிலிருந்து விரட்டியது. 

ஆ‌கவே இத்தகைய வலைதளங்களை பயன்படுத்த எங்களது கட்சி முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்களிடம் எங்கள் கருத்துக்களை எளிதாக சொல்லமுடியும். மியான்மரில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த ராணுவ அடக்குமுறை ஆட்சியினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. 


ஆனால் இது நீண்ட நாட்களுக்கு இனி நீடிக்காது. இனி சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் புரட்சியை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆங்சான்சூகியின் இல்லத்திற்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டது. இதற்காக ஆங்சாங்சூகி ஆயிரம் டாலருக்கு மேலாக செலவு செய்துள்ளார்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP