டில்லியில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு : மாஜி அமைச்சர் ராஜா கைது
ராஜினாமா, ரெய்டு, கைது : கண்ணுக்குத் தெரியாத ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு நாட்டையே உலுக்கியது. நாட்டுக்கு பேரிழப்பை எற்படுத்திய 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து பார்லிமெண்ட் கூட்டு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கூறி எதிர்கட்சிகள் ஏற்படுத்திய அமளியால், பார்லிமென்ட் குளிர் கால கூட்டத் தொடர் முற்றிலுமாக முடங்கியது. எதிர்ப்பு வலுக்கவே பதவியை ராஜினாமா செய்தார் ராஜா. இருப்பினும் தான் தவறு ஏதும் செய்யவில்லை என விளக்கங்களையும், பேட்டிகளையும் அளித்து வந்தார்.
அப்போது தான் ரெய்டு நடவடிக்கை தொடங்கியது. முதல் முறையாக கடந்த டிசம்பர் 8ம் தேதியன்று டில்லி மற்றும் சென்னை, பெரம்பலூரில் இருக்கும் ராஜாவின் வீடுகள், அவரது உறவினர்கள் வீடுகளில் ஒரே நேரத்தில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது.
ராஜா தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது அவரது தனிச்செயலர் ஆர்.கே. சண்டோலியா, மாஜி செயலர் சித்தார்த்த பெஹூரியா, தொலைதொடர்பு துறை உறுப்பினர் ஸ்ரீதர், துணை இயக்குநர் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது வீடுகளிலும் ரெய்டு நடைபெற்றது. ஆனால் ரெய்டு வெறும் கண்துடைப்புதான் என எதிர்கட்சிகள் ஒருமித்த குரல் எழுப்பின.
ராஜினாமா, சுப்ரீம்கோர்ட்டின் கண்டிப்பு என அடுத்தடுத்து நெருக்கடிகள் ராஜாவுக்கு வலுத்து வந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டசபை தேர்தல் வரவிருக்கும் நிலையில் ஸ்பெக்ட்ரம் முறைகேடு சர்ச்சையால் தி.மு.க., வுக்கு அவப்பெயர் ஏற்பட்டு விட்டதாக கூறி கட்சியின் மூத்த பிரமுகர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.
அமைச்சர் அழகிரி, தனது தி.மு.க., தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகவும் தகவல்கள் வெளியாயின. பின்னர் அதனை முதல்வர் கருணாநிதி மறுத்தார். இருப்பினும் ராஜா மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே வரும் சட்ட மன்ற தேர்தலை சந்திக்க ஏதுவாக இருக்கும் என்று கட்சியினரிடையே பேச்சு நிலவியது.இந்நிலையில் தான் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜா கைது : தி.மு.க., வினர் கல்வீச்சுபெரம்பலூர்: ஸ்பெக்ரம் முறைகேடு காரணமாக ராஜா கைது செய்யப்பட்டார். இதனை அறிந்த பெரம்பலூர் தி.மு.க., வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். படம் எடுக்கச் சென்ற நிருபர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். நன்றி:மீடியாவாய்ஸ்
0 கருத்துரை:
Post a Comment