ஒரு நிமிடம் இங்கே !!!!
கீழே இணைக்கப்பட்டுள்ள புகைப்படங்களைப் பாருங்கள். எந்த பள்ளிக்கூடத்திலும் அல்லது உயர் பல்கலைக்கழகத்திலும் சொல்லித்தரப்படாத பாடம். அது சொல்லும் ஆயிரம் அர்த்தங்களையும் மற்றும் படிப்பினைகளையும். இவ்விரு பிஞ்சுகளுக்கு இருக்கும் இரக்கம் கூட நம்மில் அதிகாரத்திலும், பண பலத்திலும் மூழ்கிப்போய் கிடக்கும் பலப்பெரிசுகளுக்கு இருப்பதில் லை.விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்
வெறும் ஏட்டுப்பாடம் மட்டும் படிக்க அமெரிக்க, அயல் நாடுகளுக்குச் செல்லும் அரசியல் தலைவர்களின் வாரிசுகள், பணக்கார வர்க்கங்களின் பாசமிகு பிள்ளைகள் இலவசமாக ஓராயிரம் கருத்துச்செறிவை வழங்கிடும் இப்புகைப்பட பாடத்தையும் படித்துச்செல்லட்டும்....இவ்வி ரு சிறுவர்களும் சொர்க்கம் செல்ல இந்த வாயில்லாப்பிராணியே ஏன் காரணமாக இருக்கக் கூடாது? நிச்சயமாக மனித சக்திக்கு அப்பாற்பட்டதையும் தெள்ளத்தெளிவாக அறியக்கூடியவன் தான் வல்ல இறைவன்...
நீண்ட இடைவெளிக்குப்பின் ஒரு புகைப்பட விளக்கக் கட்டுரையை இங்கு உங்களின் பார்வைக்கு வழங்கி மகிழ்கிறேன்.
"... எந்த ஓர் ஆத்மாவின் மீதும் அது தாங்கிக் கொள்ள முடியாத சுமையை அல்லாஹ் சுமத்துவதில்லை ..." (அல்குர்ஆன் 2:286).
(இறைவன் மிக்க அறிந்தவன்)
0 கருத்துரை:
Post a Comment