TMMK சகோ-ஹைதர் அலி அவர்களின் மருமகன் உமர் சரீஃப் விபத்து ஒன்றில் தாருல் பகாவை அடைந்து விட்டார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.......
07-05-2010 அன்று சகோதரர். உமர் சரீஃப் இரத்ததானம் செய்யும் பொழுது எடுத்த படம்.
தொண்டியை சேர்ந்த சகோதரர். உமர் சரீஃப் (வயது-29) அவர்கள் இன்று காலை (24-11-2010) ஷார்ஜாவில் எதிர்பாராத விபத்து ஒன்றில் தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள். (இவர் தமுமுகவின் பொதுச்செயலாலர் சகோ-ஹைதர் அலி அவர்களின் மருமகன் ஆவார் மற்றும் தமுமுக துபை மண்டலத்தின் நிர்வாகியுமாவார்)
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
சகோ.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய 'ஜன்னதுல் பிர்தௌஸ்' சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார் மற்றும் உறவினர் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் துஆ செய்யுங்கள்.
நன்றி! வஸ்ஸலாம்!!
தமுமுக துபை மண்டலம்
தொடர்பு எண்கள்: 00971 50 4474563 . 00917 55 291049
0 கருத்துரை:
Post a Comment