நபியவர்கள் தம் கப்ரிலிந்தவாறே பணம் கொடுத்த அதிசயம் ? ஜமாலியை மி்ஞ்சிய தப்லீக் ஜமாஅத்
நபியவர்களிடம் நேரடியாக பேசும் பெரியார்கள், நபியவர்கள் தம் கப்ரிலிந்தவாறே பணம் கொடுத்த அதிசயம்
ஜக்கரிய்யா மௌலானா அவர்கள் ஒருமுறை தம் மஜ்லிஸில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது நபியவர்கள் அவ்விடத்தில் சற்று உயர்ந்த மஜ்லிஸில் உட்காந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னிலையில் அழகிய புத்தகங்கள் பல அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்துக்கும் மேலே ஹஜ்ஜின் சிறப்பு என்ற தஃலீம் புத்தகம் இருந்தது. அதற்குக் கீழ் ஸலவாத்தின் சிறப்பும், அதன்கீழ் ஹயாத்துஸ் ஸஹாபா கிதாபும் இருந்தன. அவ்வேளை அங்கே யூஸூப் பின்னூரி அவர்கள் வந்து நபியவர்களும் ஜக்கரிய்யா மௌலானாவும் பேசிக் கொண்டிருப்பதைக் செவியுற்று புன்னகைத்த வண்ணமே சென்றார்கள். (அறிவிப்பவர் அப்துல் ஹமீம் மௌலானா(ஆப் பைத்தீ ப: 134)
நபியவர்கள் தம் கப்ரிலிந்தவாறே பணம்
கொடுத்த அதிசயம்.
ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. ..
முஹம்மதிப்னு முன்கதிர் என்பவர் சொல்கின்றார். எனது தந்தையிடத்தில் ஒருவர் ஒருதொகைப் பணத்தை அமானிதமாக ஒப்படைத்து விட்டு ஜிஹாதுக்குச் சென்றார். உமக்குத் தேவைப்பட்டால் அதை எடுத்துச் செலவு செய்யுங்கள் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிச் சென்றார். எனது தந்தைக்கு அவசியத்தேவை ஏற்பட்டதனால் அதை எடுத்துச் செலவு செய்யும்படியாகி விட்டது. பின்னர் அம்மனிதர் வந்து தனது பணத்தைக் கேட்ட போது (அவரிடம் பணமில்லை) அடுத்த நாள் தருகின்றேன் என்று வாக்களித்து விட்டார்கள். பின்பு கவலையுடன் நபியவர்களுடைய கப்றுக்குச் சென்று அங்கு தனது பிரச்சினையை நபியவர்களிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தார்கள். பின் மிம்பறுக்குப் பக்கத்திலும் சென்று பிரார்த்தித்தார்கள். ஸூபஹ் வேளை நெருங்கியிருக்கும். எனது தந்தை கப்ரிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். என்ன ஆச்சரியம் !! இருளிலே ஒரு அசரீரி. . முஹம்மதின் தந்தையே இதைப் பிடியுங்கள்! என்று ஒரு சத்தம். என் தந்தை கை யை நீட்டியதும் ஒரு பணப்பையை நபியவர்கள் கப்றுக்குள் இருந்தவாறே கொடுத்தார்கள். அதை எடுத்து தனது அமானிதத்தை தந்தை உரியவரிடம் ஒப்படைத்தார். (ஸதகாவின் சிறப்பு 943)
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தப்லீக் பரதேசிகளின் உளரல்கள் (பர-தேசிகள் அதாவது வெளிநாட்டவர்)
ஷேய்க் சர்தார் முஹம்மது பாக்கிஸ்த்தானி அவர்கள் கூறுகின்றார்கள் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியின் அல் மஜீத் கதவுக்குட்பட்ட இடம் பத்து வருடங்களாக தப்லீக் ஜமா அத்தினரின் கேந்திர ஸ்த்தலமாக இருந்து வந்தது. அப்போது தப்லீக்கின் அமீராக இருந்த முஹம்மது யூஸூப் திஹ்லவி அவர்களுடன் டில்லியில் நிலாமுத்தீன் பகுதியில் இருந்த இல்யாஸ் (றஹ்) அவர்களின் கப்றுக்கு நள்ளிரவில் செல்வோம் அங்கு கப்ரைச் சுற்றி நீண்ட நேரம் தலைகளைத் தாழ்த்தியவர்களாக முறாக்கபா எனும் சிந்தனையில் இருப்போம். அப்போது(ஹயாத்துஸ் ஸஹாபா) எனும் நூலை எழுதிய யூஸூப் (றஹ்); சொல்வார்கள் 'நிச்சயமாக இந்தக் கப்றிலிருக்கும் மௌலானா இல்யாஸ் (றஹ்) அவர்கள் தனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் ஒளியினைத் தமது சீடர்களுக்கு அவரவர் தரீக்காவின் மீது கொண்ட பற்று நம்பிக்கைக் கேற்ப பங்கு வைத்துக் கொடுப்பார்கள்' என்று கூறினார்கள். (தப்லீக் ஜமாஅத் எனும் நூல் 63-65)
நன்றி ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
இதற்கு மேலும் தப்லீக் ஜமாஅத்தை ஆதரிக்கக்கூடியவர் உங்களில் யார் இருக்கிறார்கள்! தில்லு இருந்தா சொல்லுங்கப்பா!
0 கருத்துரை:
Post a Comment