Monday, September 6, 2010

தமிழகத்தைச் சேர்ந்த 80 பேர் லிபியா நாட்டில் தவிப்பு








தமிழகத்தைச் சேர்ந்த 80 பேர் லிபியா நாட்டில் கடந்த 9 மாதங்களாக கொத்தடிமையாக சிக்கித் தவிக்கும் தகவல் தெரியவந்துள்ளது. அவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்கும்படி உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த முனியம்மா என்ற பெண், வெளிநாடு வாழ் இந்தியர் நலத்துறையின் சென்னை அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் தனது மகன் முனுசாமி உள்பட 86 பேர் கட்டிட வேலைக்காக லிபியா நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அங்கு கடந்த 9 மாதமாக சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் அனைவரும் உணவின்றி பரிதவித்து வருவதாகவும் கூறியுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது மகன் முனுசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த விபரங்களை தெரிவித்ததாகவும், அப்போது அங்கிருந்தவர்கள் தொலைபேசி தொடர்பை துண்டித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

86 பேரில் ஒருவர் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார். மேலும் 5 பேர் தொற்றுநோய் காரணமாக சொந்த ஊருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், ஊதியம் வழங்கவில்லை என அந்நாட்டு காவல்நிலையத்தில் புகார் கொடுத்த 25 பேர் மீது பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தற்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP