இந்திய எல்லைக்கு அருகில் சீனாவின் நவீன ஏவுகணைகள்
இந்திய எல்லையையொட்டி நவீன ஏவுகணைகளை (சிசிஎஸ்-5) சீனா தயார் நிலையில் வைத்துள்ளது. இந்திய எல்லைஅயையொட்டி முன்னதாக குறைந்த தூரம் பாய்ந்து சென்ற தாக்கவல்ல சிசிஎஸ்-3 ரக ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்திருந்தது. இப்போது இதற்குப் பதிலாக நீண்ட தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் படைத்த நவீன ஏவுகணைகளை சீனா தயார் நிலையில் வைத்துள்ளதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் நிலை உருவானால் குறுகிய நேரத்தில் விமானப் படையை எல்லைப் பகுதிக்கு அனுப்பி வைக்கும் அவசரகாலத் திட்டத்தையும் சீனா வகுத்துள்ளதாக பென்டகன் கூறியுள்ளது.
சீன-இந்திய எல்லையில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து ஆய்வு செய்த பென்டகன், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் இந்திய எல்லையையொட்டிய பகுதியில் நவீன ஏவுகணைகளை சீனா நிறுத்தி வைத்துள்ளதாகவும், அவசரகாலத் திட்டத்தை வகுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. - பகலவன்.
0 கருத்துரை:
Post a Comment