Saturday, August 21, 2010

அமீர‌க‌ புகைப்ப‌ட‌ ப‌த்திரிகையாள‌ர் நூர் அலி ராஷித் கால‌மானார்

அமீர‌க‌  புகைப்ப‌ட‌ ‌ ப‌த்திரிகையாள‌ர் நூர் அலி ராஷித் ( வ‌ய‌து 80 ) 19.08.2010 வியாழ‌க்கிழ‌மை மாலை ஷார்ஜாவில் திடீரென‌ கால‌மானார். ( இன்னாலில்லாஹி வ‌ இன்னா இலைஹி ராஜிவூன் )

வியாழ‌க்கிழ‌மை மாலை நோன்பு திற‌ப்ப‌த‌ற்கு முன்பு ப‌டுக்கையிலிருந்து எழுந்த‌ அவ‌ர் திடீரென‌ கால‌மான‌தாக‌ அவ‌ர‌து ம‌க‌ன் நௌஷாத் ராஷித் தெரிவித்தார். முன்னர் ஒரு முறை இதய அருவை சிகிச்சை செய்து ந‌ல்ல‌ உட‌ல் நிலையுட‌னே இருந்து வ‌ந்துள்ளார் ராஷித். எனினும் திடீர் மார‌டைப்பு ஏற்ப‌ட்டிருக்க‌லாம் என‌ அவ‌ர் மேலும் தெரிவித்தார்.

ராஷித் 1929 ஆம் ஆண்டு அப்போதைய‌ இந்திய‌ ப‌குதியாக‌ இருந்து த‌ற்போதைய‌ பாகிஸ்தானில் உள்ள‌ க்வாத‌ர் மாகாண‌த்தில் பிற‌ந்த‌வ‌ர். க‌ட‌ந்த‌ ஐம்ப‌து ஆண்டுக‌ளுக்கும் மேலாக‌ அமீர‌க‌ அர‌ச‌ குடும்ப‌த்தின‌ரின் அதிகார‌பூர்வ‌ புகைப்ப‌ட‌ ப‌த்திரிகையாள‌ராக‌ விள‌ங்கி வ‌ந்த‌வ‌ர். மேலும் THE ROYAL PHOTOGRAPHER என்று சேக்ஜாய்த் அரச குடும்பத்தால் அழைக்கப்பட்டவர்.
எலிச‌பெத் ராணி, பால‌ஸ்தீன் அதிப‌ராக‌ விள‌ங்கியா யாச‌ர் அர‌பாத், அமெரிக்க‌ அதிப‌ராக‌ இருந்த‌ பில் கிளிண்ட‌ன் உள்ளிட்ட‌ ப‌ல்வேறு உல‌க‌த்த‌லைவ‌ர்க‌ளை ச‌ந்தித்த‌வ‌ர். அமீர‌கம் குறித்த‌ ப‌ல்வேறு நூல்க‌ளை வெளிக்கொணர்ந்த‌வ‌ர். ப‌ல்வேறு விருதுக‌ளையும் பெற்றுள்ளார்.
இவ‌ருக்கு 75 வ‌ய‌தில் ம‌னைவியும், ஆறு குழ‌ந்தைக‌ளும், 11 பேர‌க்குழ‌ந்தைக‌ளும் உள்ள‌ன‌ர்.
ராஷித் ம‌றைவுக்கு அர‌ச‌ குடும்ப‌த்தின‌ரும், அமீர‌க‌ ப‌த்திரிகையாள‌ர்க‌ளும் இர‌ங்க‌ல் தெரிவித்துள்ள‌ன‌ர்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP