Thursday, August 5, 2010

இஸ்லாமிய கடமைகள் நான்கு ஒன்றாக சங்கமிக்கும் மாதத்தில் நம்மிடையே கருத்து பரிமாற்றம்.-இது ஓர் சுயபரிசோதனை இழை

இஸ்லாத்தின் உறுதியின் வெளiப்பாடான தாரக மந்திரமான "வணக்கத்திற்குரியவன் வல்லவனாம் அல்லாஹுவைத் தவிர பிறிதொருவன் இலன், முஹும்மது(ஸல்) அவர்கள் அந்த அல்லாஹுவின் திருத்தூதர் ஆவார்கள்" என்ற திருக்கலிமாவை உணர்வாக ஏற்று அதனை நம்புவதே இஸ்லாத்தின் முதல் கடமை. இந்த கடமையின் தொடர்ச்சியே தொழுகை-இறைவழிப்பாடு, நோன்பு- இறைவனுக்காக பசித்திருத்தல், ஜக்காத்-எளiயோர்களுக்கு தருமம் செய்தல் இவைகள் நான்கும் வழக்கத்தை விட பேணப்படும் ஒரே மாதமாக ரமலான் திகழ்கிறது. இதனால் தான் என்னவோ இறைவன் மனிதர்களiன் நேர்வழிக்கும், ஒழுக்க நெறிகளுக்கும், வாழ்வு நடப்புகளுக்கும் எத்தனையோ விதமான விஷயங்களை தொடர்புப்படுத்தி வைத்துள்ளான்.


ரமலான் காலங்களiல் ஒவ்வொரு மனிதர்களiன் பேச்சிலும், நடத்தையிலும் இறைவனின் திருவசனங்களiன் வெளiப்பாடு காண நேரிடும். இஸ்லாமியர்களiன் வாயிலிருந்து வேதத்தின் அருள் வசனங்கள் தடைபடாமல் அலங்காரமாக ஒலித்துக் கொண்டே இருக்கும். வீட்டிலும், வணக்கஸ்தலங்கள், வியாபார ஸ்தலங்கள் என்று எந்தவித பாகுபாடு இல்லாமல் திருவசனங்கள் எல்லாத் திசைகளiலும் நிறைந்த நாதமாக மனதை தொட்டுக் கொண்டே இருக்கும்.

ஐந்து வேளை தொழுகையிலும் திருவசனங்கள் ஒலித்துக் கொண்டே இருக்கும். தராவீஹுதொழுகையில் ஹாபிழ் (திருக்குர்ஆர் முழுவதும் மனனம் செய்தவர்) பெருமக்கள் இதமாக, மென்மையுடன் தேன்மொழியாக 6666 திருவசனங்களை ஓதும் போது மனிதனின் மனம் சந்தோஷம் அடைகிறது. மனிதன் புரணமாக வாழ்வதற்கு தேவை நேர்வழியாக தான் இருக்க முடியும். இதை ஒவ்வொரு தொழுகையிலும் மனிதன் தனக்கு தானே ஒரு  பிரார்த்தனை செய்து வருகிறான் அதுதான் ஒவ்வொரு தொழுகையிலும் ஓதும் "அல் பாத்திஹா" என்ற அத்தியாயமாகும். இதுவே உம்முல் குர் ஆன் என்ற சிறப்பான பெயரை கொண்டுள்ளது அதாவது திருக்குர்ஆனின் தாய் என்ற சிறப்பு இந்த அத்தியாயத்திற்கு உள்ளது. இந்த பிரார்த்தனை தொழுகையில் மாத்திரமல்ல மனிதர்கள் எப்போதெல்லாம் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறார்களோ அப்போதெல்லாம் இதன் தொடக்கமாகவே செய்கிறார்கள். அல் பாத்திஹாவின் தமிழ்மொழிபெயர்பான "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹுவின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன் அண்ட சராசரங்கள் அனைத்தையும் படைத்துக் காத்துப்பரிபக்குவப்படுத்துபவனும், அளப்பரிய அருளுக்கும் மிகப்பெரிய அன்புக்கும் உரியவனும் நீதி நிலை நாட்டப்படும் நாளiன் நாயகனும் ஆகிய அல்லாஹு தமக்கே எல்லாப் புகழும் நாங்கள் உன்னையே சிரந் தாழ்த்தி வணங்குகிறோம்.

உன்னிடமே கரந்தூக்கிப் பிரார்த்திக்கிறோம் எனவே உன்னுடைய முனிவுக்குள்ளானவரோ தடம்புரண்டவரோ சென்ற வழியல்லாத நேரான வழியில் நீ எங்களை சீராக நடத்துவாயாக" (ஆமீன்) இந்த ஏழு வசனங்களiன் உட்பொருள் ஒருவர் உணர்ந்தால் அவர் இந்த கருத்துக்களுக்கு உடன்பட்டவர்களாகவே தன்னை மாற்றிக் கொள்வார்கள்.  இதன் காரணத்தால் தான் மனிதன் நல்வாழ்வை வாழ முடிகிறது. இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியிலும் திருவசனங்களiன் ஒலி நாதங்கள் பல்வேறு ஊடகங்களiல் பவனிவந்துக் கொண்டே இருக்கின்றன.

குறையாத செல்வ வாய்ப்புகள் பல இருந்தும் இறைவனின் கட்டளையை நிறைவு செய்யும் விதத்தில் பாலர்கள் முதல் வயோதிகர்கள் வரை கடைப்பிடிக்கும் ரமலான் நோன்பு, பசி என்பதன் பொருள் புரியாதவர்களுக்கு உணர்வு பூர்வமாக அர்த்தம் கொடுக்கிறது. ஒவ்வொரு மனிதனும் இந்த மாதத்தில் முழு மனிதராக மட்டும் இல்லாது ஓர் புனித ஸ்தானத்தில் வைத்து காண நேரிடும் வாய்ப்பை பெறுகிறார்கள்.


ரமலானை வாழ்த்தி வரவேற்க காத்திருக்கும்f நாம் ரமலானின் சிறப்புகளையும், இதன் மூலம் நமக்கு தௌiவாகும் நடைமுறை செயல்களை நம் சகோதரர்கள் மற்றும் சகோதரிகளiன் உணர்வான கருத்துகளை இந்த குழுமத்தில் ஒவ்வொரு ரமலான் தினத்திலும் ஆய்வுடன் கூடிய ஒரு கருத்தை அல்லது ஆலோசனையை வைத்தால் முடிந்த வரை நாம் வாழ் நாளiல் அதை செய்து பார்த்து வல்ல அல்லாஹுவின் அருள் கிடைக்க முயற்சி செய்fயலாம்.

இதுவரை எத்தனையோ உலக நடப்புகள் அரசியல், பொது இயக்கம் அமைப்பு என்று நமது கருத்து பரிமாற்றங்கள் இருந்துள்ளது. இதற்கு நாம் அதிக அளவில் நம் நேரத்தை செலவிட்டு இருக்கிறோம். நாளை மறுமையில் நமக்கு பலன் தரும் எத்தனையோ விசயங்களை நாம் சில நேரத்தில் பல வித காரணத்தால் செய்யாமல் இருந்துவிடும் நிலை உள்ளது. நாம் சொந்தபணிகளiல் அதிக ஈடுபாடு காட்டுவோம். ஆனால் நமக்கு அல்லாஹு விதித்த கடமைகளiல் குறைந்த அளவில் ஈடுபாடுவோம். இந்த நிலையை எப்படி இம்மைக்கும், மறுமைக்கும் பலன் தரும் விதமாக இருக்கும் கருத்துகள், ஆலோசனைகளை இங்கே இந்த இழையில் தினமும் வைத்தால் சிறப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் தன் சுயசிந்தனைகளiன் அடிப்படையில் ஆதாரமான விசயங்களை பற்றி இங்கு கருத்துகளை பரிமாற்றி கொள்ளோம்.

இந்த முயற்சியில் முதல் தொடக்கமாக சகோதரர் புர்ஹான், சகோதரி லறீனா, சகோதரர் கீழை ஜமீல் மூவர்களும் உங்களiன் எண்ண பிரதிபலிப்பை இந்த இழையில் வையுங்கள். அத்துடன் இவர்களை தொடர்ந்து இந்த குழுமத்தில் உள்ள ஒவ்வொரு சகோதரர், சகோதரிகளும் தங்களiன் கருத்து மற்றும் ஆலோசனையை நம் அனைவர்களும் எந்த வகையில் பின்பற்ற வேண்டும் என்பதை பகிர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

வாருங்கள் சகோதரர்களே நாளை மறுமையில் பயன்மிக்க ஒரு செயல்பற்றி கருத்துகளை பரிமாற்றி கொண்டு நன்மைகளை பெற்று கொள்வோம்.

ஆக்கம் : முகம்மது நூர்தீன்

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP