ஈறுகளில் ரத்தக் கசிவா…?
ஈறுகளில் இரத்தம் கசிந்தால் தொற்றுள்ளது என்று அர்த்தம். பற்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாவிட்டால் நாம் உண்ணும் உணவில் துணுக்குகள் பல்லிடுக்குகளில் ஈறை ஒட்டி தங்கி நாளடைவில் பற்காரையாக மாறும்.
தடுப்பது எப்படி? மென்மையான முனைகள் கொண்ட பிரஷ்ஷினால் மிருதுவாக பற்களைச் சுத்தம் செய்ய வேண்டும். உப்புக் கரைசலினாலோ அல்லது ஹைடிரஜன் பெராக்ûஸடு கரைசல் கொண்டோ வாயைக் கொப்பளிப்பதன் மூலம் இதைத் தடுக்கலாம்.
வராமல் காத்துக் கொள்வது எப்படி? தினமும் இருமுறை பல் துவக்குவது; இரத்தக் கசிவைக் கண்டவுடன் பல் மருத்துவரிடம் சென்று பற்களை சுத்தம் செய்து கொள்வது, குறைந்தது ஒருமுறையாவது முறைப்படி வாய் கொப்பளிப்பது; அடிக்கடி இனிப்பு சாப்பிடுவதைத் தவிர்ப்பது; ஆண்டுக்கொரு முறை பல் மருத்துவரை நாடி சிகிச்சை பெறுவது, பாக்டீரியாவை நீக்கும் குளோர்ஹெக்ஸிடைன் கொண்டு வாயைக் கழுவுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் ஈறுத் தொற்று, இரத்தக் கசிவு ஆகியவற்றைத் தடுக்கலாம்.
0 கருத்துரை:
Post a Comment