தர்ஹாக்களை வலம் வரும் பிரபலங்கள்
இன்னொரு புறம் தர்ஹா எனும் பெயரில் ஏதேனும் சவக்குழியின் மீது பட்டுத்துணி போர்த்தி அதை வணங்குவதும் அதனிடம் பிரார்த்தனை செய்வதும் இருந்து வருகின்றது. அங்கும் இந்த பிரபலங்கள் சுற்றி வருகின்றன. கிறிஸ்தவ மற்றும் இந்து மதத்தில் இருக்கும் இச்செயல்கள் இஸ்லாத்தில் இல்லை என்பது அந்த பிரபலங்களுக்கு மட்டுமல்ல சில இஸ்லாமியர்களுக்கே தெரிவதில்லை.
மனித வரலாற்றில் போதிக்கப்படும்மார்க்கம், மதங்கள், கடவுள்கோட்பாடுகளில் வித்தியாசமான,பகுத்தறிவுக்குட்பட்ட, அறிவுபூர்வமானகடவுள் கோட்பாட்டை வழங்கும்,விளங்கப்படுத்தும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
இதனை ஒவ்வொரு தனிமனிதனும் விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக்கொள்கின்றார்கள்.
'அல்லாஹ்' என்று தனதுதனித்துவமிக்க பெயரையும்ஆற்றலையும் தன்னகத்துக் கொண்டுபேசும் அல்லாஹ் "வணக்கத்திற்குதகுதியானவன் இப்பூமியில்யாருமில்லை, அல்லாஹ்வாகியஒருவனைத்தவிர' என்றதனிச்சிறப்புமிக்க, துணை கற்பிக்க முடியாத, இணைதுணையைசேர்த்துப் பார்க்க முடியாத விதத்தில்உலகிற்கு பிரகடனப்படுத்துகின்றான்.
அவன் வாழ வழிகாட்டி இருக்கும்'இஸ்லாம்' என்கின்ற சாந்தி,சமாதானம் நிறைந்த மார்க்கத்தைபின்பற்றி வெற்றி பெறுவதாகஇருந்தால் இந்த கலிமாவைஉள்ளத்தால் ஏற்று நாவால்மொழிந்து, நடத்தையால்செயற்படுத்திக் காட்டுவதை மட்டுமேஅங்கீகரிக்கின்றான்.
சிறு குழந்தையின் கையில் ஒருகோப்பை தூய வெண்நிற பாலைக் கொடுத்து வெள்ளை என்றால்இப்படித்தான் இருக்கும் என்று விளங்கப்படுத்துவது போல்தான் அல்லாஹ்தனது இணை துணையற்ற பேராற்றலை உலக மக்களுக்கு விளங்க வழி செய்கின்றான்.
"மேலும், லுக்மான் தன் மைந்தனுக்கு அவர்அவருக்கு உபதேசம் செய்தவராக, என்அருமை மைந்தனே! அல்லாஹ்வுக்குஇணைவைத்தல் மிகப்பெரிய அநியாயமாகும்என்று கூறியதை (நபியே! நீர் நினைவுகூர்வீராக!) அல் குர் ஆன் 31 : 13)
ஆனால் இஸ்லாம் என்ற பெயரில் ஒரு கூட்டம் தங்களது வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்ள'தர்ஹா வழிபாடு' என்கின்ற இணைவைப்புக் கொள்கையை உருவாக்கி பாமர மக்களையும்சேர்த்து பாதாளக் குழியில் தள்ளிக்கொண்டிருப்பது கவலைக்குரியதாகும்.
வாழும் போது முகவரியற்ற மனிதன், மரணித்த பின்னர் மாமனிதராகி,கடவுள் நேசராகி, அவ்லியாக் குஞ்சாகி வாழும் மனிதர்களுக்கு உதவிசெய்வதாக இந்த அறிவற்ற, சிந்தனையற்ற சமூகம் நம்பி வணங்கிவருகின்றது. ஏனெனில் சவக்குழிக்குள் இருப்பது மனிதப் பிணமா அல்லது மிருகத்தின் பிணமா என்பது கூட அதை வணங்குபவர்களுக்கு தெரியாது.
இந்நிலையால் பெரும்பாலான மக்கள் இவ்வுலகிலும் மறு உலகிலும்நஷ்டவாளிகளாக, நிரந்தர மன்னிப்புக் கிடைக்காத துர்பாக்கியநிலைக்கு தள்ளப்படுவது கவலைக்கிடமானதாகும்.
அதிலும் குறிப்பாக இந்த அப்பாவி முஸ்லிம் பெயர்தாங்கிகளின் அறிவற்றவழிகாட்டல்களை ஏற்று பிறமத பிரபலங்களும் இந்த தர்ஹாக்களை வலம்வருவது கேலியானதாகும்.
தர்ஹாக்களை புனிதத்தலங்களாகவும் அதில் அடக்கப்பட்டவர்களைஅவ்லியாக்களாகவும் பார்க்கும், மதிக்கும் மக்களை அவர்களதுநிலைமைகளையும் தரங்களையும் கவனத்தில் கொள்ளும் போதுநோக்கங்கள் வேறுபடுவதை அவதானிக்கமுடியும்.
1.படித்தவர்கள், உலமாக்கள்தர்ஹாக்களை வழிநடத்துவதற்கும்,நிர்வகிப்பதற்கும் காரணம் அங்குள்ளஉண்டியல்களை தன்வசப்படுத்திக்கொள்வதற்காக.
2.முஸ்லிம், முஸ்லிமல்லாதபிரபலங்கள் தர்ஹாக்களை வலம்வரக் காரணம், மக்கள் செல்வாக்கைஅதிகரித்துக் கொள்வதற்காக.
3. வருவது சில உலமாக்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதாலேயாகும்.
4. பதவி படைத்தவர்கள் பலதரப்பட்ட மக்களையும் தன்வசப் படுத்துவதற்காக. இது போன்று இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன.எனவே நாம் உலகில் படைக்கப்பட்டிருப்பது அல்லாஹ்வை அவன் சொல்லும் விதத்தில் வணங்கி வழிப்படத்தான் என்பதை கவனத்தில் கொண்டு இணை துணையற்றவன் அவன் என்பதை எமது வாழ்வில் உறுதிப்படுத்தி, நிலைநாட்டி, இந்த தர்ஹா வழிபாடு இஸ்லாத்தில் இல்லாதது என்பதை இந்த பிரபலங்களுக்கு எடுத்துக்கூறி மாற்றங்கள் செய்வோம். நன்றி: சேஞ்சஸ்டூ




0 கருத்துரை:
Post a Comment