Sunday, August 29, 2010

ஆர்.எஸ்.எஸ், வி.ஹெஜ்.பி. பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்யவேண்டும்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெவித்த 'புதிய காவி பயங்கரவாதம்' என்ற கருத்து காவிகளுக்கு மத்தியில் பலத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாநிலங்களவையில் இதுகுறித்து கூச்சல் குழப்பத்தில் சங்க்பரிவார அமைப்புகள் இறங்கின. இதையொட்டி எதிர்கட்சித் தலைவர் அருன்ஜெட்லியை பேச அழைத்தார் அவைத்தலைவர் அன்சாரி. அப்போது குறுக்கிட்டுப்பேசிய லோக்சனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், பயங்கரவாத அமைப்புகளுக்கும், ஆர்.எஸ்.சுக்கும் தொடர்புண்டு என குற்றம் சாட்டினார். பாஸ்வானின் இந்தகருத்துக்கு பாஜக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து அவையின் மையப்பகுதியில் குழுமி கூச்சலில் ஈடுபட்டதையடுத்து அவையை 15 நிமிடம் ஒத்திவைத்தார் அன்சாரி.


மீண்டும் அவை துவங்கியபோது, அருண்ஜெட்லி காஷ்மீர் பிரச்சினை, நக்சல் வன்முறை, பஞ்சாபில் தீவிரவாதம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன. இவற்றில் எல்லாம் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமுதாயம் சம்மந்தப்பட்டுள்ளதா..? என்று காவி பயங்கரவாதத்திற்கு சப்பைக்கட்டு கட்டஅப்போது மீண்டும் குறுக்கிட்ட பாஸ்வான்,

பொறுப்புள்ள அமைச்சராக சிதம்பரம் பேசியுள்ளார். காவி பயங்கரவாதிகள் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். அதோடு, ஆர்.எஸ்.எஸ், வி.ஹெஜ்.பி. பஜ்ரங் தளம் உள்ளிட்ட அமைப்புகளை தடை செய்யவேண்டும் என்றும் ஆணித்தரமாக அவையில் முழங்கினார் பாஸ்வான்.

பாஸ்வான் அவர்கள் குறிப்பிட்ட அமைப்புகளை தடைசெய்யவேண்டும் என்பது தனிப்பட்ட பாஸ்வானின் கருத்தல்ல; மாறாக அமைதியை விரும்பும் ஒவ்வொரு இந்தியனின் கருத்துமாகும். சிமிக்கு தடையை நீட்டிக்கும் அரசு, சங்க்பரிவார அமைப்புகளை தடை செய்யாதவரை மதசார்பற்ற அரசாக மக்களால் கருதப் படாது என்பதை காங்கிரஸ் கவனத்தில் கொள்ளவேண்டும்

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP