Saturday, August 7, 2010

இலவச சட்டரீதியான ஆல் இன் ஒன் வீடியோ மென்பொருள்

அனைத்து வேலைகளையும் ஒரே மென்பொருளில் செய்தால் என்ன விதமான பலன்கள் கிடைக்கும்.   நேரம் மிச்சமாகும்.  வன் தட்டுகளில் இடம் மிச்சமாகும்.  அத்துடன் ஐகான் அதிகமாக இடத்தை அடைத்துக் கொள்ளாது.

நான் இங்கு குறிப்பிட போகும் மென்பொருள் என்னென்ன வேலைகள் செய்யும் என்று முதலில் தெரிந்து கொள்வோம்.

யூட்யூபில் இருந்து வீடியோக்களை தரவிறக்கலாம்.

யூட்யூபில் இருந்து தரவிறக்கிய வீடியோக்களை MP3 அல்லது iPOD மற்றும் iPhone PSP வகைகளுக்கு மாற்றலாம்.

யூட்யூபிற்கு நேரடியாக தரவேற்றலாம்.

எந்த ஒரு வீடியோவையும் டிவிடி ஆக மாற்றலாம்.

எந்த ஒரு வீடியோவையும்  .FLV கோப்பாக மாற்றலாம்.

3gp கோப்பிலிருந்து வேறு வீடியோ கோப்பாக மாற்றலாம்.

எந்த ஒரு வீடியோவையும்  MP3 ஆக மாற்றலாம்.

எந்த ஒரு வீடியோவிலிருந்து JPG படமாக மாற்றலாம்.

ஆடியோ மாற்றியும் இணைந்து இருக்கிறது.

டிவிடி வீடியோ மற்றும் ஆடியோ எரிக்கும் வசதி

டிவிடி டிகிரிப்ட் செய்யும் வசதி

வீடியோ தலைகீழாக இருந்தால் நேராக மாற்றும் வசதி (Rotate & Flip)


இத்தனை வசதியும் ஒரே மென்பொருளில் இருந்தால் கட்டாயம் குறைந்தது 50 டாலராவது கேட்பார்கள் நிறுவனத்தினர்.  ஆனால் இவர்கள் முற்றிலும் இலவசமாக அளிக்கின்றனர்.  இதன் Free Studio.  ஆனால் மென்பொருளில் தரவிறக்க அளவு 30 எம்பி மட்டுமே இதன் வசதிகளை பார்க்கையில் தரவிறக்கலாம்.  நேரடியாக தரவிறக்க சுட்டி

நன்றி : கெளதம்

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP