Saturday, August 7, 2010

அமெரிக்க பயங்கரவாதத்தின் 65 வது நினைவுதினம்!






இன்று உலகின் ஜனநாயகத்தின் பாதுகாவலன் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் அமெரிக்காவின் கடந்துவந்த பாதைகளை கண்ணுற்றால் அவை அந்நாட்டின் கோரமுகத்தை காட்டும் கண்ணாடியாக விளங்குவதை காணமுடியும். இராண்டாம் உலகப் போரின்போது ஜப்பான் நகரங்களான ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுத குண்டுகளை வீசி அழித்தது. அமெரிக்காவின் இந்த அணுஆயுத தாக்குதலில் முதலில் ஹிரோஷிமா மீது வீசப்பட்ட 'லிட்டில் பாய்' என்ற குண்டின் மூலம் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் பேர் உயிரிழந்தனர். பல்லாயிரம் பேர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இரண்டாவதாக நாகசாகி மீது 'பேட்மேன்' என்ற அணுகுண்டை அமெரிக்கா வீசியதில் அந்த நகர் நிர்மூலமாக்கப்பட்டதோடு, கதிர்வீச்சால் சுமார்
இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேர் மாண்டதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் அத்தகைய மோசமான மனிதப்படுகொலையின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
அன்று அமெரிக்காவுக்கு ஒரு ஹிரோஷிமா- நாகசாகி;
இன்று ஒரு ஈராக்-ஆப்கானிஸ்தான்.
அமெரிக்க பயங்கரவாதத்தின் முடிவு நாள் எப்போது....?
வேண்டாம் அணு ஆயுதம்; வேண்டும் அன்பு எனும் ஆயுதம்.

0 கருத்துரை:

  © வடிவமைப்பு அராஃபத் - 2010

Back to TOP