ஒரு மரம் வீழ்ந்தால், இழப்பு 33இலட்ச ரூபாய்!
நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பது போல…மழை வளம் குறைந்தபிறகுதான்,மரங்களின் அருமையை உணர்கிறோம். அந்த மழையைத் தருவித்துதருகிற சக்தி மரங்களுக்கு உண்டு என்றாலும், குறிப்பாகப் பால் வடியும் மரங்கினங்களுக்குத்தான் மிகமிக அதிகத் தொடர்பு மழையோடு உண்டு, என விஞ்ஞானம் தெரிவிக்கிறது.
இதற்குச் சான்று தரும் வகையில், பசுமை விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணன் ஒரு கட்டுரையில் காஞ்சிபுர மாவட்டம் செய்யூர் அருகில் உள்ள அரியன்னூரைக் குறிப்பிடுகிறார். அந்த ஊரில் ஏராளமான அரச மரங்கள் உள்ளன. அங்கு தண்ணீர் வசதியும் சிறப்பாக உள்ளது. அங்குள்ள முன்னோர்களின் பட்டறிவு காரணமாக அரசமரம் நிறைய நடப்பட்டு இருக்கிறது.
ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள மரங்களினால்…அதிகபட்சமாக இரண்டு இலட்சம் கன மீட்டர் மழை நீரைப் பூமியில் மரங்கள் இல்லாத இடத்தை விட மரங்கள் உள்ள இடத்தில் ஏழு மடங்கு நீர் பூமிக்குள் இறங்குகிறது என விஞ்ஞானம் தெரிவிக்கிறது.
பூமி வளம் பெறுவதற்குரிய தழை உரத்தைத் தரக்கூடிய மரங்களிலும், மண் அரிப்பைத் தடுக்கக் கூடியதிலும் அரச மரத்திற்கு முக்கிய இடம் உண்டு. மக்கள் கூடுகிற பூங்கா, பள்ளி, கல்லூரி, திரையரங்கு வளாகம் என எங்கு வேண்டுமானாலும் அரச மரத்தை வைக்கலாம். மரம் வளர்க்க வேண்டும் என்றதும் பலருக்கு இயல்பாக எழும் வினா? மரத்தின் வேர்கள் அருகில் இருக்கும் கட்டிடத்தைப் பாதித்து விடாதா? என்பது தான்.
எனவே மரங்களின் வேர்கள் இந்த பூமிக்குள் இருக்கும் தூண்களுக்கு இடையே ஊடுருவிக் கொள்ளும். ஒரு வகையில் அது கட்டிடத்திற்கு நீர் தன்மையும் நல்ல ஆயுளையும் தரக்கூடியதாக இருக்கும்.” என்றவர் தொடர்ந்து…
”ஜம்பது ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு மரம் 5.3 இலட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்த உயிர்க்காற்றை (ஆக்ஸிஜன்)வெளியிடுகிறது. மண்ணில் விழுந்து மட்கும் இலைகளினால், அம்மண் அடைகிற வளத்தின் மதிப்பு 6.4 இலட்சம் ரூபாய். படர்ந்து விரியும் வேர்களினால் 6.4 இலட்சம் ரூபாய் மதிப்பிற்கான மண் அரிப்பு தடுக்கப்படுகிறது. 10.5 இலட்சம் ரூபாய் மதிப்பிற்குக் காற்று மண்டலம் மாசு அடைவதைத் தடுக்கும் பணியில் ஈடுபடுகிறது.
5.3 இலட்சம் ரூபாய் மதிப்பிற்கு ஏராளமான பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் வசிப்பிடங்களாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாத நேரடி பலனாக நமக்கு நிறையக் கனிகளும், பூக்களும் தருகிறது.
எனவே ஒரு மரம் வீழ்ந்தால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் இழப்பு 33இலட்ச ரூபாய். ”என்றும் ஒரு புள்ளிவிபரத்தை நச்சென வழங்கினார்.
0 கருத்துரை:
Post a Comment