எளிய உடற்பயிற்சிக்கு பிறகு 2 குவளை பால் குடித்தால் பெண்கள் எடை ஏறாது
கனடாவைச் சேர்ந்த மெக்மாஸ்டர் யுனிவர்சிட்டியின் உடலியல் துறை பேராசிரியர் ஸ்டு பிலிப்ஸ் தலைமையிலான குழுவினர், பெண்களின் கொழுப்பு சத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வை மேற்கொண்டனர்.
ஒரே உடல்வாகு உடைய இளம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டனர். தினமும் எளிய உடற்பயிற்சிகள் செய்யும் வழக்கம் உடையவர்கள் அவர்கள்.
பயிற்சியை முடித்தவுடன் ஒரு பிரிவினருக்கு கொழுப்பு நீக்கப்பட்ட ஒரு டம்ளர் பால் கொடுக்கப்பட்டது. மற்றொரு குழுவுக்கு சர்க்கரையை அடிப்ப டையாகக் கொண்ட பானம் கொடுக்கப்பட்டது. பயிற்சி முடிந்த 1 மணி நேரத்துக்கு பின், மீண்டும் அதே அளவு பால் மற்றும் பானம் கொடுக்கப்பட் டது. இவ்வாறு 12 வாரங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டது. பின்னர் அவர்களின் உடல் எடை, கொழுப்புச் சத்தின் அளவு பரிசோதிக்கப்பட்டது. பானம் குடித்த பெண்களைவிட பால் குடித்த பெண்களின் உடலில் கொழுப்பு அதிகம் சேராதது ஆய்வில் தெரியவந்தது. இவர்களின் உடல் எடையும் அதிக ரிக்கவில்லை.
தினமும் எளிய உடற்பயிற்சிக்குப் பிறகு பால் குடித்து வந்தால் பெண்களின் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பது ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள் ளது. இந்த நடைமுறை உடல் எடையை பராமரிக்க உதவும்Õ என பிலிப்ஸ் தெரிவித்தார்.
0 கருத்துரை:
Post a Comment